திமுகவிற்கு சென்ற அந்த வார்னிங்.. எல்லோரையும் அனுப்புங்க.. "வடக்கிற்கு" வலைவிரித்த ஸ்டாலின்.. பொளேர்
சென்னை: வடதமிழகத்தில் இருக்கும் தொகுதிகளை குறி வைத்து திமுக சார்பாக மிகவும் வலுவான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கியது போக மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக களமிறங்குகிறது .
திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முதல்நாள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு நாள் கழித்து இன்று வெளியிடப்பட்டுள்ளது.இன்று வெளியன் திமுக வேட்பாளர் பட்டியலில் பல சுவாரசியமான விவரங்கள் அடங்கி உள்ளன.

வடக்கு
திமுக சார்பாக சட்டசபை தேர்தலில் அனுபவமிக்க முக்கியமான பலர் வேட்பாளர்கள் பார்த்து பார்த்து களமிறக்கப்பட்டுள்ளனர். முக்கிய வடதமிழகத்தில் மிகவும் வலுவாக திமுக வேட்பாளர்கள் குறி வைத்து களமிறக்கப்பட்டுள்ளனர். திமுகவில் அதிக வாய்ஸ் இருக்கும், தலைமையோடு நெருக்கமாக இருக்கும் முக்கிய வேட்பாளர்கள் எல்லோரும் வடதமிழகத்தில்தான் களமிறக்கப்பட்டுள்ளனர்.

யார்
அதன்படி ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின், ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்,திருக்கோவிலூர் - பொன்முடி,விக்கிரவாண்டி - புகழேந்தி, செஞ்சி - மஸ்தான், ஆரணி - எஸ்எஸ் அன்பழகன், திருவண்ணாமலை - எவ வேலு, செங்கம் - மு.பெ.கிரி, பாப்பிரெட்டிபட்டி - பிரபு ராஜகுமார்,பென்னாகரம் - இன்பசேகரன்,பாலக்கோடு - முருகன், ஓசூர் - ஒய்.பிரகாஷ், வேப்பனஹள்ளி - முருகன்,கிருஷ்ணகிரி - செங்குட்டுவன்,பர்கூர் - மதியழகன், திருப்பத்தூர் - நல்லதம்பி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

செங்கல்பட்டு
ஜோலார்பேட்டை - தேவராஜு,ஆம்பூர் - விஸ்வநாதன் குடியாத்தம் - அமலு, அணைக்கட்டு - நந்தகுமார்,வேலூர் - கார்த்திகேயன்,ராணிப்பேட்டை - காந்தி,உத்தரமேரூர் - சுந்தர், செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா, காட்பாடி - துரைமுருகன்,சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ், ஆவடி - சா.மு.நாசர், திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்,மாதவரம் - சுதர்சனம்,

ஆவடி
அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல் , மதுரவாயல் - காரப்பாக்கம் கணபதி, மயிலாப்பூர் - த.வேலு,சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியம்,விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா,அண்ணா நகர் - மோகன் சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்,எழும்பூர் - பரந்தாமன்,திருவிக நகர் - தாயகம் கவி,வில்லிவாக்கம் - வெற்றியழகன், பெரம்பூர் - ஆர்.டி.சேகர்,ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர்,கொளத்தூர் - மு.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

வடக்கு
வடக்கு மாவட்டங்களை குறி வைத்து முக்கியமான வேட்பாளர்களா எல்லோரும் களமிறக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக வன்னியர்கள், தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், கவுண்டர் ஜாதியை சேர்ந்தவர்கள் கலவையாக களமிறக்கப்பட்டுளள்னர். எல்லா சமுகத்தில் இருந்தும் கலவையாக வேட்பாளர்களை திமுக வடக்கில் களமிறக்கி உள்ளது. வடக்கில் எப்படியாவது கொடி நாட்டை வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக இருக்கிறது.

வார்னிங்
வன்னியர் இடஒதுக்கீடு, பாமகவின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திமுக வடக்கில் கொஞ்சம் வீக்காக இருந்தது. இங்கு வன்னியர் உள் ஒதுக்கீடு காரணமாக பாமக திடீர் உச்சம் பெற்றுள்ளது. அதிமுகவிற்கு இது பெரிய உதவியாக இருக்க போகிறது.

திமுக
இங்கு திமுக மொத்தமாக பின்னடையவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாகவே நிர்வாகிகள் பலர் திமுகவிற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இதை எல்லாம் மனதில் வைத்து தற்போது திமுக மிகவும் வலிமையான வேட்பாளர்கள் எல்லோரையும் வர வைத்து வடக்கு மாவட்டங்களில் களமிறக்கி உள்ளது. இங்கு திமுக பெரிய அளவில் கூட்டங்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications