175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. 164 தொகுதிகளில் திமுக நேரடியாகவும் 11 தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டம்
பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வாக்குறுதிகள், விருப்ப மனு விநியோகம் என தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. மறுபுறம், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
திமுக, கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது. இதுவரை காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக, மமக, ஐயூஎம்எல், விசிக, உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட சீட்
காங்கிரஸ் - 28 தொகுதிகள் (கை சின்னம்)
தேமுதிக- 10 தொகுதிகள் (முரசு சின்னம்)
விசிக - 8 தொகுதிகள் (பானை சின்னம்)
இந்திய கம்யூனிஸ்ட் - 5 தொகுதிகள் (கதிர் அரிவாள் சுத்தியல்)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5 தொகுதிகள் (அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்)
மதிமுக - 4 தொகுதிகள் (3ல் உதயசூரியன் 1 தனி சின்னம்)
மமக - 2 தொகுதிகள் (உதயசூரியன்)
ஐயூஎம்எல் - 2 தொகுதிகள் (ஏணி சின்னம்)
கொமதேக - 2 தொகுதிகள் (உதயசூரியன்)
ஆகமொத்தம் 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 66 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதம் 168 தொகுதிகள் உள்ளன. மக்கள் நீதி மய்யம், சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை, திமுக கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
175 சீட்களில் உதயசூரியன்
மதிமுக - 3, மமக - 2, கொமதேக - 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளன. இனி கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே மொத்தமாக 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னம் 175 இடங்களில் போட்டியிடும்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக நேரடியாக 173 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் 15 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதாவது, மொத்தமாக உதயசூரியன் சின்னத்தில் இருந்து 188 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்த முறை இந்த எண்ணிக்கை 175 ஆக குறைந்துள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள்
1. திமுக
2. காங்கிரஸ்
3. மதிமுக
4. இந்திய கம்யூனிஸ்ட்
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
6. விடுதலை சிறுத்தைகள் கட்சி
7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
9. மனிதநேய மக்கள் கட்சி
10. அகில இந்திய பார்வர்டு பிளாக்
11. தேமுதிக
12. மக்கள் விடுதலை கட்சி
13. ஆதித்தமிழர் பேரவை
14. மக்கள் நீதி மய்யம்
15. முக்குலத்தோர் புலிப்படை
16. எஸ்டிபிஐ
17. மனிதநேய ஜனநாயகக் கட்சி
18. கொங்கு இளைஞர் பேரவை
19. திராவிட வெற்றிக் கழகம்
20. புதிய திராவிட கழகம்












Click it and Unblock the Notifications