ஒரே நாளில் 40 தொகுதிகளுக்கும்.. அதி வேக நேர்காணல்.. புதிய சாதனை படைத்த திமுக!
சென்னை: திமுக வரலாற்றிலேய முதல் முறையாக ஒரே நாளில் 40 தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தி அசத்தியுள்ளனர்.
இடைத் தேர்தலாகட்டும், பொதுத் தேர்தலாகட்டும் திமுகவில் நேர்காணல் நடத்தித்தான் வேட்பாளர்களைத் தேர்வு செய்வார்கள். அதுதான் காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை.
திமுகவின் நேர்காணல் நடைமுறையைத்தான் பின்னாளில் மற்ற கட்சிகளும் கடைப்பிடிக்க ஆரம்பித்தன. இன்று அதிமுக, தேமுதிக என எல்லோருமே இதைத்தான் பின்பற்றி வருகின்றனர்.

குறுகிய காலத்தில்
இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலை ஒரே நாளில் நடத்தி முடித்துள்ளது திமுக. திமுக வரலாற்றில் இப்படி ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்பட்டதில்லை.

40 தொகுதிகளுக்கும் ஒரே நாளில்
முதலில் சட்டசபை இடைத் தேர்தலுக்கான நேர்காணலை திமுக நேற்று முன்தினம் நடத்தியது. நேற்று லோக்சபா வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்தது. அதில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுத்திருந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

கனிமொழியும்
நேற்றைய நேர்காணலில் ஸ்டார் மனுதாரர் கனிமொழி ஆவார். தூத்துக்குடி தொகுதிக்கான நேர்காணலில் அவர் கலந்து கொண்டார். அவரிடம் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்பாலு ஆகியோர் கேள்விகள் கேட்டனர்.

11 மணி வரை
நேற்றைய நேர்காணல் இரவு 11 மணி வரை தொடர்ந்துள்ளது விண்ணப்பித்த ஒருவரையும் விடாமல் நேர்காணல் கண்டார் ஸ்டாலின். 20 தொகுதிகளில்தான் திமுக போட்டியிடுகிறது என்றாலும் கூட 40 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தியுள்ளார் ஸ்டாலின்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications