திமுக அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.. வேல்முருகன் கோரிக்கை வைத்ததுமே.. பணி ஆணை உத்தரவு
வேல்முருகன் வைத்த கோரிக்கைக்கு குன்னூர் ராமச்சந்திரன் பதிலளித்தார்
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஒரு கோரிக்கை வைத்ததுமே, அதை உடனே ஏற்று பதிலளித்து திகைக்க வைத்தார் திமுக அமைச்சர் ராமச்சந்திரன்..!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கியது... இதையடுத்து உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மீது விவாதம் மற்றும் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் வனம், சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றம் துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நினைவிடம்
அமைச்சர் ராமச்சந்திரன் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி அமைச்சர் மெய்யநாதன் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பேரவை
பேரவையில் இன்று, வனத்துறை மீதான மானியக் கோரிக்கையின்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என்று மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை வைத்தார்.. வேல்முருகன் பேசி அமர்ந்ததுமே, வனத்துறை அமைச்சர் குன்னூர் ராமச்சந்திரன் இதற்கு பதில் அளித்தார்..

பணிநியமனம்
அப்போது அவர் பேசியபோது, "வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களில், 10 வருடத்துக்கும் மேலாக பணிபுரியும் 1,119 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் பழங்குடியினர் வேட்டை தடுப்பு காவலர்கள் 56 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.. மேலும் மீதமுள்ள 1063 நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் விரைவில் பணி நிரந்தர ஆணை வழங்கப்படும்...

முதலைகள்
சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட குளத்தில் முதலைகள் இருப்பதாகவும், அந்த முதலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்... எனவே, அங்குள்ள முதலைகளை அப்புறப்படுத்தி சாத்தனூர் முதலைப் பண்ணைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்... எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப சிதம்பரத்தில் முதலை பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications