சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய தேசிய கல்வி கொள்கையை ஆராய 9 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்தது திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: புதிய தேசிய கல்வி கொள்கையை ஆராய 9 பேர் கொண்ட வல்லுநர் குழுவை திமுக அமைத்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழியாம் செம்மொழிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி கல்வித்துறை வல்லுநர்களின் கருத்தினை அறிய திமுக விரும்புகிறது.

DMK forms committee on NEP

கல்வி கொள்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு உயர்கல்வி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் முனைவர் அ. இராமசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் ம. இராஜேந்திரன், பச்சையப்பன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணசாமி, திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ, சமூக நீதிக்கான மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்தரநாத், பொதுக் கல்விக்கான மேடையின் தலைவர் பேராசிரியர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, டாக்டர் செந்தில்குமார் எம்.பி. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிற மாநிலங்களைப் போல அதிமுக 'பெருந்தலைகள்' கூண்டோடு அப்படியே பாஜகவில் ஐக்கியமாகின்றன? பிற மாநிலங்களைப் போல அதிமுக 'பெருந்தலைகள்' கூண்டோடு அப்படியே பாஜகவில் ஐக்கியமாகின்றன?

இந்த ஆய்வுக் குழு 10 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என கூறியுள்ளார்.

English summary
DMK President MK Stalin has formed that the expert Committe on NEP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X