"பஞ்சமி நிலம் பற்றி ஒரு கேள்வியாவது கேட்டாரா.. வாயிலேயே வடை சுடுவது".. திருமாவளவனை சீண்டிய காயத்ரி

விசிக திருமாவளவனை சீண்டி மீண்டும் ட்வீட் போட்டுள்ளார் காயத்ரி ரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பஞ்சமி நிலம் பற்றி இதுவரைக்கும் திமுகவிடம் ஒரு கேள்வி கேட்டாங்களா? வேறு ஏதாவது பத்தியாவது திமுகவிடம் கேள்வி கேட்டாங்களா? வாயிலேயே வடை சுட்டு தனது தோல்விகளை ஒப்புக்கொள்கிறார் திருமாவளவன்" என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Recommended Video

    திருமாவளவனை சீண்டிய காயத்ரி

    சும்மா இருப்பவர்களை சீண்டி பார்ப்பார்களே.. அதைதான் காயத்ரி ரகுராம் செய்து வருகிறார்... தன்னை பிரபலப்படுத்தி கொள்ள, பிரபலமானவர்களுடன் மோதும் போக்கை கடைப்பிடிப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்.

    dmk: gayathri raghuram criticized vck thirumavalavan

    இவர் பாஜகவின் அபிமானி... ஆனால் அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று ஒருமுறை தமிழிசை சவுந்தராஜனே தெரிவித்திருந்தார். பாஜக ஆதரவாளராக இவர் காட்டி கொள்வதற்காகவே சில ட்வீட்களை போட்டு வருகிறார்.. அந்த வகையில் பெரும்பாலான ட்வீட்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை சார்ந்துதான் இருக்கும்.

    "சரக்கு மிடுக்கு" என்று எச்.ராஜா எப்போதாவது விமர்சிப்பார்.. ஆனால் காயத்ரி ரகுராம் எப்பவுமே விசிகவினரை சீண்டி வருகிறார்.. இப்போதும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதுவும் திருமாவை விமர்சித்துதான்!!

    dmk: gayathri raghuram criticized vck thirumavalavan

    திமுகவின் அமைப்புச் செயலாளரான ஆர்எஸ்பாரதி, கைது செய்யப்பட்டு பிறகு இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.. இதேபோல, திமுக எம்பிக்கள், தயாநிதிமாறன், டிஆர்பாலு ஆகியோரும் முன்ஜாமீன் பெற்றனர்.

    இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் பாஜகவிற்கு பத்து கேள்விகள் என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.. இந்த வீடியோ மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. பாஜகவினருக்கு இது கொதிப்பை ஏற்படுத்தி, கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இது சம்பந்தமாகத்தான் காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், "இப்போது எம்பியாக இருக்கும் திருமாவளவனால் எதுவுமே செய்ய முடியவில்லை.. அவரை நம்பி இருப்பவர்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளார்... அவர் பஞ்சமி நிலம் பற்றியோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனை பற்றி திமுகவிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை... வாயிலேயே வடை சுட்டு தனது தோல்விகளை ஒப்புக்கொள்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

    இதை பார்த்ததும் விசிகவினர் திரண்டு வந்து காயத்ரியை திட்டி கொண்டிருக்கிறார்கள். காயத்ரி ட்விட்டரில் விசிகவும், விசிக ட்விட்டரில் பாஜகவும் என மாறி மாறி கொந்தளித்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+