லோக்சபா தேர்தல்: ரெடியாகும் திமுக- சென்னையில் கூட்டணி தலைவர்கள் கூட்டம்- திருவாரூரில் நிதிஷ்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை திமுக முடுக்கிவிட தொடங்கிவிட்டது. சென்னையில் இன்று நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டத்தில் கருணாநிதி சிலைகள், கருணாநிதி படிப்பகங்கள், கூட்டணி தலைவர்கள் கூட்டம் என லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து வியூகம் வகுத்துள்ளது திமுக.

லோக்சபா தேர்தலுக்கு சரியாக ஓராண்டுதான் இருக்கிறது. லோக்சபா தேர்தல் முன்கூட்டியே நடைபெறவும் கூடும் எனவும் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலை முன்வைத்து அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன.

DMK Gears up with Alliance for Loksabha Election 2024

பாஜக, காங்கிரஸ் கட்சிகளைப் பொறுத்தவரையில் லோக்சபா தேர்தலுக்கு முந்தைய சட்டசபை தேர்தல்களை மிக முக்கியமானதாகப் பார்க்கிறது. அதே நேரத்தில் மாநில கட்சிகளை காங்கிரஸ் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கும் அரசியல் நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராகப் பதவியேற்ற நிகழ்வில் திமுக உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதனை லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான ஒத்திகையாவும் பார்க்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதனைத் தொடர்ந்து திமுகவும் இன்று சென்னையில் கூட்டிய உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலை இலக்கு வைத்தே பல்வேறு வியூகங்களுடன் தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் கருணாநிதி சிலைகள், படிப்பகங்கள், கிராமங்கள் தோறும் கொடிக் கம்பங்கள் அமைத்தல் என பரந்துபட்ட அளவில் திமுகவினரை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது கட்சித் தலைமை. லோக்சபா தேர்தல் வரையிலும் திமுகவினர் ஓயாமல் கட்சிப் பணியாற்ற வேண்டிய அளவுக்கு கட்சித் தலைமை வியூகம் வகுத்துள்ளது. இத்தகைய வியூகமானது திமுக தொண்டர்களை, நிர்வாகிகளை எந்தவித சோர்வும் இல்லாமல் லோக்சபா தேர்தல் பணிக்கு கொண்டு செல்லக் கூடியதாகவும் இருக்கும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

இன்னொரு பக்கம், ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் வடசென்னையில் நடத்தப்பட உள்ளது. திமுக கூட்டணியை பிளவுபடுத்த முடியும் என்கிற வகையில் பல்வேறு யூகங்கள் பரப்பிவிடப்படுகிற சூழலில் இந்த கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் முதன்மையானதாகவும் பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்படுகிறது. திமுகவின் தேசிய அரசியல் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், திருவாரூர் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க உள்ளார். கிளை கழகம் தொடங்கி தேசிய அரசியல் வரை பரந்துபட்ட அளவிலான திமுகவின் இந்த வியூகம் அக்கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சக் கூடும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+