எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. எனவே இளம் தலைமுறையினரிடம் கட்சியை வளர்த்தெடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று அறிவாலயத்தில் நடைபெற்ற ஜென் ஸி இளைஞர்களின் கூட்டம் குறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்காலம் நம்பிக்கை கொடுக்கிறது என்றும், எனெர்ஜி கூடுகிறது எனவும் கூறியிருக்கிறார்.
67 ஆண்டுகால கட்சி திமுக. கொள்கை அரசியலில் இன்றைக்கும் உறுதியாக நின்று சண்டை செய்யும் கட்சி. மத்திய அரசின் பாரபட்சத்திற்கு எதிராக தரமான முறையில் திமுக கடந்த காலங்களில் சண்டை செய்து வந்திருக்கிறது. இருந்தும் சமீபத்தில் தொடங்கப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுகவை தோக்கடித்திருக்கிறது.

வரலாற்று சிறப்பு வாய்ந்த அரசியல் இயக்கம், வெறுமென சாதாரண நடிகரின் கட்சியால் எப்படி தோல்வியடைந்தது? என்பது குறித்து தோல்விக்கான காரணங்களை திமுக தலைமை ஆய்வு செய்தது. அதில் தற்போது இருக்கும் ஜென் ஸி இளைஞர்களிடையே கட்சியின் கொள்கைகளை கொண்டு சேர்க்காதது பெரிய பின்னடைவு என்று தெரிய வந்தது. இதனையடுத்து இளைஞர்களுடனான கலந்துரையாடலை திமுக தொடங்கியது.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜென் ஸி இளைஞர்களுடனான கலந்துரையாடலை திமுக நடத்தியது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று கட்சியை அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதித்திருந்தனர். இந்த கூட்டம் குறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர்களின் வருகை நம்பிக்கையளிப்பதாக கூறியிருக்கிறார்.
"எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது. எதிர்க்கட்சி என்றாலும் எனர்ஜி கூடுகிறது. இதுதான் திமுக! வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்!" என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
