Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

DMK General Council Live: லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் தலைவராக 2-வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி எம்.பியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார்.

சென்னையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒன்றிய, நகர, நகரிய , பேரூர், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப் பினர்கள் பங்கேற்றனர்.

DMK general council meet Live: CM MK Stalin to be elected DMK President

Oct 09, 2022, 1:59 pm IST

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
Oct 09, 2022, 1:06 pm IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது உரையை நிறைவு செய்தார்
Oct 09, 2022, 1:04 pm IST

திமுக இல்லாவிட்டால் தமிழகத்தின் நிலைமையை கற்பனை செய்ய முடியாது: மு.க.ஸ்டாலின்
Oct 09, 2022, 1:04 pm IST

தமிழர்களை தமிழர்கள் என உணரவைத்தது திமுக
Oct 09, 2022, 1:04 pm IST

தமிழர் என உணர்வு பெற்றவர்களை உரிமைக்கு போராட வைத்த இயக்கம் திமுக
Oct 09, 2022, 1:04 pm IST

ஒருநாட்டுக்கான அனைத்து தன்னிறைவையும் உருவாக்கிய இயக்கம் திமுக
Oct 09, 2022, 1:04 pm IST

லோக்சபா தேர்தலுக்கான பூத் கமிட்டியை 2 மாதங்களில் முடித்தாக வேண்டும்; திமுகவினருக்கு ஸ்டாலின் கட்டளை
Oct 09, 2022, 1:02 pm IST

சாதனைகளை சொல்ல முடியாத பாஜக; சரிந்தும் சிதைந்து கிடக்கும் அதிமுக- முதல்வர் மு.க.ஸ்டாலின்
Oct 09, 2022, 1:02 pm IST

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி திமுக முக்கியமான சக்தியாக திகழ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
Oct 09, 2022, 1:00 pm IST

2026 சட்டசபை தேர்தலில் 100% வெற்றிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம்
Oct 09, 2022, 1:00 pm IST

பாஜக வெல்வதற்கு எந்த கீழ்த்தரமான செயலையும் செய்யக் கூடும்
Oct 09, 2022, 1:00 pm IST

அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள்- அதனால் பாஜக மூச்சு திணறுகிறது
Oct 09, 2022, 1:00 pm IST

அம்மையார் ஜெயலலிதா தலைமைக்கு பின் அதிமுக கலகலகத்து கிடக்கிறது
Oct 09, 2022, 12:59 pm IST

அதிமுகவின் பிளவுகளில் குளிர்காய நினைக்கிறது பாஜக
Oct 09, 2022, 12:56 pm IST

பாசறைக் கூட்டங்களை தெருமுனை கூட்டங்களாக, திண்ணை பிரசாரங்களாக, தனிமனித பிரசாரமாக செய்யுங்கள்: ஸ்டாலின்
Oct 09, 2022, 12:55 pm IST

உதயநிதியின் பாசறை கூட்டங்களை பார்க்கும் போது மிக மிக மிக நிறைவாக இருக்கிறது- முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
Oct 09, 2022, 12:55 pm IST

நிதிநிலை சீராக இருந்திருந்தால் இன்னும் பல 100 திட்டங்களை தீட்டியிருப்போம்: முதல்வர் ஸ்டாலின்
Oct 09, 2022, 12:54 pm IST

திமுகவினர் பேசியதை வெட்டியும் ஒட்டியும் பரப்புவார்கள்- முதல்வர் ஸ்டாலின்
Oct 09, 2022, 12:54 pm IST

நமது கவனத்தை திசை திருப்புவதுதான் எதிரிகளின் ஒரே நோக்கம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
Oct 09, 2022, 12:54 pm IST

நீங்கள் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்; கண்ணியமான சொற்களை பயன்படுத்துங்கள்- முதல்வர் ஸ்டாலின்
Oct 09, 2022, 12:53 pm IST

பொது இடங்களில் சிலர் நடந்து கொண்டதன் மூலம் திமுகவுக்கு பழிக்கு ஆளானது- திமுக
Oct 09, 2022, 12:51 pm IST

என்னை துன்பப்படுத்துவது போல மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உருவாக்கினால் நான் என்ன செய்வது? ஸ்டாலின்
Oct 09, 2022, 12:49 pm IST

சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்க வைக்க வேண்டும்; இனி தமிழகத்தை நிரந்தரமாக ஆளப் போவது திமுகதான்: ஸ்டாலின்
Oct 09, 2022, 12:49 pm IST

எந்த ஒரு மனிதரையும் விட திமுக, கொள்கைதான் பெரிது என செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
Oct 09, 2022, 12:49 pm IST

சில நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் இருப்பது கூட கட்சிக்கும் துரோக செய்வது- முதல்வர் ஸ்டாலின்
Oct 09, 2022, 12:48 pm IST

அனைத்து நிர்வாகிகளின் செயல்பாடுகளும் தலைமை கழகம் கண்காணிக்கும்- ஸ்டாலின்
Oct 09, 2022, 12:43 pm IST

திமுக பழுத்தமரமாக இருப்பதாக கல் எறிகிறார்கள்; பழுத்த மரம் மட்டுமல்ல கல் கோட்டை திமுக- ஸ்டாலின்
Oct 09, 2022, 12:43 pm IST

போட்டியிடுவது மட்டுமல்ல விட்டுக் கொடுப்பதும் ஜனநாயகம்தான் என்பார் அண்ணா: மு.க.ஸ்டாலின்
Oct 09, 2022, 12:40 pm IST

தமிழகத்தில் அண்மையில் நடநத அனைத்து தேர்தல்களில் திமுக வென்றுள்ளது- ஸ்டாலின்
Oct 09, 2022, 12:40 pm IST

திமுக உட்கட்சித் தேர்தல் சிலசிலசலப்புகளை தவிர பொதுவாக அமைதியாக நடந்துள்ளது- முதல்வர் ஸ்டாலின்
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+