மூச்சுத் திணறல்... திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் சென்னை மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் (வயது 98) வயது மூப்பால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வருகிறார். தமது வீட்டில் மருத்துவர்களின் கண்காணிப்பில் க. அன்பழகன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 8.15 மணிக்கு அன்பழகனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டார்.
இத்தகவலை அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.












Click it and Unblock the Notifications