பாஜக கூட்டணி முறிவு: திமுக அணி கட்சிகள் அதிமுகவுக்கு தாவல்? அமைச்சர் துரைமுருகன் அடித்த 'கமெண்ட்’
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தமக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்கிறோம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதாக அறிவித்தை அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடினர். ஆனால் பாஜக தரப்பில் கனத்த மவுனம் தொடருகிறது.

பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டதாக அதிமுக அறிவித்தாலும் இருதரப்பும் விமர்சனங்களைத் தவிர்த்து வருகின்றன. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் என்றே பல்வேறு தரப்பும் கருத்து தெரிவித்து வருகின்றன.
உதயநிதி ஸ்டாலின் கருத்து: இந்த விவகாரம் குறித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அதேநேரத்தில், இருவரும் நாடகமாடுகின்றனர்; ஒருவன் கொள்ளையன்... இன்னொருவன் திருடன் என திமுக இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
அதிமுக விவகாரம்- துரைமுருகன்: இதனிடையே சென்னையில் இன்று திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனிடம் செய்தியாளர்கள் அதிமுக- பாஜக கூட்டணி முறிவு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அடுத்த வீட்டுல நடக்கிற சமாசாரம். இன்னொரு கட்சியினுடைய விவகாரம். ஒரு கட்சியுடன் கூட்டு சேருவதும் சேராததும் அந்த கட்சியின் நிலைப்பாட்டை பொறுத்தது.
நாங்கள் கருத்து சொல்ல முடியாது: அதிமுக என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதை அந்த கட்சித் தலைவர்கள் உணர வேண்டும். அந்த கட்சித் தலைவர்கள் உணர்ந்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளனர். எனவே இது அதிமுகவின் தனிப்பட்ட விவகாரம். அதில் நாங்கள் தலையிட்டு கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
திமுக கூட்டணி கட்சிகள் தாவலா?: அப்போது, திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு மாறலாம் என கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஊடகங்களில் எது வேணும்னாலும் எழுதுவீங்க.. என சொல்லியபடியே பேட்டியை நிறைவு செய்தார் அமைச்சர் துரைமுருகன்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி












Click it and Unblock the Notifications