இளைஞரணி செயலாளர் பொறுப்பு பறிப்பு.. வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு!
சென்னை: இளைஞரணி செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டது.
திமுகவின் அதிகாரமிக்க பொறுப்புகளில் ஒன்று திமுக இளைஞரணி செயலாளர் பதவியாகும். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு ஏதேனும் பொறுப்பு வழங்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அவருக்கு 30 ஆண்டுகளாக அவரது தந்தை வகித்து வந்த இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து இன்றைய தினம் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் திமுக இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றி வரும் வெள்ளக்கோவில் சாமிநாதன் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக கழக சட்டத்திட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மூத்த தலைவர்களும் இந்த நியமனத்தை வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வேறு ஒரு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக புதிய பொறுப்பு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications