திமுகவுக்கு 500 கோடி கொடுத்த மார்டின்! No 2 திரிணாமுல் ! ‘இந்தியா’ கூட்டணிக்குள் பெரிய ஓட்டை!
சென்னை: தேர்தல் பத்திரங்கள் மூலம் மார்டின் ரூ.509 கோடியை திமுகவுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். அதைப் போல் சன் டிவி 100 கோடியை வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது.
புதிய தரவுகளைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டிருந்தது. இந்தத் தரவுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் எவ்வளவு தேர்தல் நிதி பெற்றுள்ளன என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

எந்தக் கட்சி எந்த நபரிடம் எவ்வளவு பணம் பெற்றது என்பதைத் தெளிவாகப் பட்டியல் போட்டுக் காட்டி உள்ளது இந்தப் புதிய தரவுகள்.
அரசியல் கட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் சீல் செய்யப் பட்ட உறைக்குள் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைப் பரிசீலனை செய்த உச்சநீதிமன்றம், சீல் இடப்பட உறையில் ஒரு பென் டிரைவ் இல் சேமித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது. அதனை ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்து நேற்று வெளியிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
அதைக் கேட்ட உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயல் ஏற்கும்படியாக இல்லை என்று சொல்லி தனது கண்டனத்தைப் பதிய வைத்திருந்தது.
15.11.2023 தேதிக்குள்ளாக அனைத்து அரசியல் கட்சிகளும் எவ்வளவு நிதியைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நன்கொடைகள் பெற்றுள்ளன என்பதற்கான விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

அந்த ஆணைக்கு இணங்க திமுக பொருளாளர் டி ஆர் பாலு, 14 நவம்பர் 2023 அன்று நன்கொடை பெற்ற விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப் பித்துள்ளார். அப்படிப் பெறப்பட்ட விவரங்களைத் தேர்தல் ஆணையம் இப்போது வெளியிட்டுள்ளது.
அதில் கோவையைச் சேர்ந்த பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து திமுக 509 கோடி ரூபாயைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.
அதாவது திமுக தனக்குக் கிடைத்த மொத்த நன்கொடையில் 77 சதவீதத்தை அமலாக்கத்துறை சேதனைக்கு உள்ளான மார்டினுக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து பெற்றது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களில் அதிக நன்கொடையை அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய பட்டியலில் மார்டினின் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. மொத்தம் ரூ. 1368 கோடியை இதுவரை இந்நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கி உள்ளது.
திமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் 656 கோடியில், மார்டின் நிறுவனம் மட்டுமே 509 கோடியை வழங்கி உள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வெளிப்படுத்தப்பட்ட முக்கிய குறிப்புகள் இங்கே:
1, தரவுகளின்படி, தமிழகத்தின் ஆளும் கட்சி மார்டின் நிறுவனத்திடமிருந்து நன்கொடையாக ₹509 கோடி பெற்றுள்ளது.
2, நன்கொடையாளர்களின் அடையாளத்தை வெளியிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளில் திமுகவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேகா இன்ஜினியரிங் நிறுவனம் திமுகவுக்கு ₹105 கோடியும், இந்தியா சிமெண்ட்ஸ் ₹10 கோடியும், சன் டிவி ₹100 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளது.
3, காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ₹1,334.35 கோடியைப் பெற்றுள்ளது.
4, பாஜக மொத்தம் ₹6,986.5 கோடிக்கான தேர்தல் பத்திரங்களைப் பணமாக்கி உள்ளது..
5, 2019-20ல் ஆளும் கட்சி அதிகபட்சமாக ₹2,555 கோடியைப் பணமாக்கியது.
6, ஒடிசாவின் பிஜேடி ₹944.5 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களைப் பணமாக்கி உள்ளது.

7, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ₹442.8 கோடியும், டிடிபி ₹181.35 கோடியும் பணமாக்கியது.
8, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் நன்கொடைகளைப் பெற்றதில் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. அக்கட்சி ₹1397 கோடி பெற்றுள்ளது.
9, பிஜேபி, திரிணாமுல் மற்றும் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக கே சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி நான்காவது இடத்தில் உள்ளது. இந்தக் கட்சி ₹1322 கோடி மதிப்பிலான பத்திரங்களைப் பணமாக்கியுள்ளது.
10, சமாஜ்வாதி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹14.05 கோடி சம்பாதித்துள்ளது.
11, அகாலிதளம் ₹7.26 கோடி, அதிமுக ₹6.05 கோடி, தேசிய மாநாட்டுக் கட்சி ₹50 லட்சம் எனத் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

12, சிபிஐ (எம்), ஏஐஎம்ஐஎம், பிஎஸ்பி , ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த நிதியையும் பெறவில்லை எனத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தெளிவாகி உள்ளது.
அமலாக்கத்துறை மூலம் மிரட்டப்பட்டதால்தான் மார்டின் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளார் என திமுக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அந்தக் கட்சியே மார்டினிடம் இருந்து சுமார் 500 கோடியை வசூலித்திருப்பது எந்தவகையில் நியாயம் என்று பாஜகவினர் புதிய சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர்.

திமுக நிதி வாங்கியதைப் போல் பாஜகவும் நிதி பெற்றுள்ளது. பாஜக பெற்றால் அது மிரட்டல் என்றும் திமுக பெற்றால் அது நன்கொடை என்று திமுகவினர் இரு வேடம் போடுவது ஏன் என்றும் பாஜக தொண்டர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications