ஸ்டாலின் அறிவித்த "1000 ரூபாய்".. பெண்களுக்கு கிடைக்குமா? கிடைக்காதா?.. அமைச்சரே சொன்ன பரபர தகவல்
விரைவில் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழ்நாட்டு மக்களே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த 1000 ரூபாய் பணத்தை திமுக அரசு எப்போது பெண்களுக்கு வழங்கப் போகிறது என்பது குறித்து நம்பிக்கை வார்த்தை தந்துள்ளார் அமைச்சர் சக்கரபாணி..!
இந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கையே வித்தியாசமாக இருந்தது.. அதில் இலவசங்களை புகுத்தவில்லை.. கலர் கலராக திட்டங்களை சொல்லி மக்களை ஏமாற்றவில்லை.
நடைமுறை யதார்த்தத்தை புரிந்து கொண்டு, மக்களுக்கு தேவையான மற்றும் தவிர்க்க முடியாத அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது பெரிதும் கவனத்தை பெற்றது.

வாக்குறுதி
அதேசமயம், தேர்தல் பிரச்சாரத்தில் மிக முக்கியமான வாக்குறுதிகளை திமுக தந்திருந்தது.. இதெல்லாம் பிரச்சார சமயத்தில் யார் வேண்டுமானாலும் சொல்லக்கூடிய வாக்குறுதிகள் என்று நினைத்துவிட முடியாது... காரணம், ஆட்சிக்கு வந்ததுமே சிலவற்றை அறிவித்து மக்களை திக்குமுக்காட வைத்தது திமுக அரசு.

தேர்தல் வாக்குறுதி
அந்த வகையில், இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் கவனத்தை பெற்றுள்ளது.. ஆனால், இதை உடனடியாக திமுக அரசால் செயல்படுத்த முடியவில்லை.. காரணம், கஜானாவை காலி செய்துவைத்துவிட்டு போயிருந்தது அதிமுக அரசு.. இதுபோக, லாக் டவுன் நேரம்.. அரசின் வருமானம் வரும் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. அதையும் மீறிதான் பல திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டதை மறுக்க முடியாது.

தொற்று
தொற்று குறைந்துள்ள நிலையில், லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில், 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம் பெருகி உள்ளது.. எப்படி பார்த்தாலும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ளது.. அந்த தேர்தலுக்குள், கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளது.. அநேகமாக பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று நம்பப்படுகிறது.

நம்பிக்கை
இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் அமைச்சர் சக்கரபாணியும் பேட்டி தந்துள்ளார்.. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் புகார் புத்தகம் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது..

பட்ஜெட்
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதிநிலையை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்" என்று நம்பிக்கை வார்த்தைகளை தந்துள்ளார்... இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பட்ஜெட்டை எதிர்நோக்கி தமிழ்நாட்டு மக்கள் காத்துள்ளனர்..!












Click it and Unblock the Notifications