வேளச்சேரியில் எதற்கு புதிய பாலம்.. கார்களை நிறுத்துவதற்கா? பட்ஜெட்டால் கொந்தளித்த தமிழிசை!
சென்னை: 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை, மீண்டும் லேப்டாப் திட்டம் கொண்டு வரப்பட்டது, டைடல் பார்க், தொழிற்பூங்கா என்று பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் எதிர்க்கட்சிகளிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டம், மாதாந்திர மின் கட்டண முறை, சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்று ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தலித் மாணவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு வருகின்றனர். வேங்கைவயல் பிரச்சனையில் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டிலேயே அவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கிறார்கள். பிரதமர் தமிழ்நாட்டை மட்டும் ஆளவில்லை. மொத்த இந்தியாவையும் ஆட்சி செய்கிறார். இன்று பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேளச்சேரியில் ரூ.300 கோடிக்கு பாலம் கட்டவுள்ளார்களாம். எதற்காக வேளச்சேரியில் மீண்டும் பாலம் கட்டப்படுகிறது?
எல்லோரும் சென்று கார் நிறுத்துவதற்கா? ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு மழை நீர் வடிவால் பணிகளே முழுமையாக செய்யவில்லை. இந்த சூழலில் இன்னொரு பாலம் கட்டப்போகிறார்களாம்.. அது பார்க்கிங் பாலமாக மாறப் போகிறது. தமிழ்நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளே இல்லை. புதிய திட்டங்களே எதுவும் இல்லை. இதனிடையே 100 இடங்களில் லைவ் ரிலே வேறு செய்கிறார்கள்.
திமுக அமைச்சர்களின் வாய் எவ்வளவு அழகாக பேசுகிறது. அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சருக்கு நாவடக்கம் தேவை என்று சொல்கிறார். தர்மேந்திர பிரதான் அவர் பேசிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொண்டார். இருந்தாலும் தொடர்ந்து விமர்சிக்கிறார்கள். ஆர்.எஸ்.பாரதி சினிமா பொறுக்கிகள் என்று சொல்கிறார். முதலமைச்சரை சொல்கிறார்களா அல்லது கருணாநிதியை சொல்கிறார்களா?
அதனால் திமுகவினர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்திருந்தால், வேறு மாதிரி முடிவு எடுத்திருப்பார். மத்திய அரசு கொடுக்க தயாராக இருக்கும் போது, மீண்டும் கடன் வாங்கி கடன் வாங்கி மக்கள் தலையில் சுமையை தள்ளுகிறார்கள். ஏற்கனவே ரூ.8 லட்சம் கோடிக்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். இது திமுக அரசின் தோல்வியடைந்த நிர்வாகம் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications