ஆஹா! ஸ்டாலினிடம் 1 மணி நேரம் பேசிய திருமா.. கூடவே வந்த வேல்முருகன்! அன்புமணிக்கு மெசேஜ் அனுப்பிய தலை
விவசாயிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் சார்பாக மூத்த அமைச்சர் ஒருவர் அன்புமணியிடம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: கடலூரில் விவசாய நிலங்களை என்எல்சி கையகப்படுத்துவது தொடர்பாக பாமக இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்திற்கு இடையில் பாமகவிற்கு திமுக சார்பாக முக்கியமான ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கடலூரில் விவசாய நிலங்களை என்எல்சி கையகப்படுத்துவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். முதல் சுரங்கத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் இரண்டாவது சுரங்கத்திற்கு நிலக்கரி எடுப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளன.
இந்த இரண்டாவது நிலம் எடுக்கும் பணிகளை என்எல்சி தொடங்கி உள்ளது. ஆனால் இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில்தான் அங்கு மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

பந்த்
இந்த விவகாரம் தொடர்பாக பாமக இன்று பந்த் அறிவித்து உள்ளது. கடலூரில் மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை என்எல்சி நிறுவனம் சமன் செய்வதாக பாமக குற்றச்சாட்டு வைத்து உள்ளது. இதில் என்எல்சி, அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து கடலூர், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக பாமக கட்சி அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில், மக்கள் நலனை விட என்.எல்.சி நிறுவனத்தின் வணிக நலனே முக்கியம் என்பதை தமிழ்நாடு அரசும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன. கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் பொதுமக்களை சிறைப்படுத்திவிட்டு, காவல்துறையினரை குவித்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அது கண்டிக்கத்தக்கது.

அறிக்கை
கடலூர் மாவட்டத்தையும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலையும் பாழ்படுத்தி வரும் என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கையகப்படுத்தித் தரும் முகவராக தமிழ்நாடு அரசும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டு வருகின்றன. மக்களைக் காப்பது தான் அரசின் முதற்கடமை என்பதை மறந்து விட்டு, என்.எல்.சி நிறுவனத்தின் கையசைவுக்கு ஏற்றவாறு தமிழக அரசு செயல்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக கண்டித்து வருகிறது. இப்போது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக அடுத்தக்கட்ட அடக்குமுறையையும், வன்முறையையும் காவல்துறை உதவியுடன் தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது., என்று பாமக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மெசேஜ்
இந்த நிலையில் அன்புமணிக்கு திமுக சார்பாக மூத்த அமைச்சர் ஒரு முக்கியமான மெசேஜ் அனுப்பி உள்ளாராம். அதில், போராட்டத்தை கைவிடுங்கள். நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மின்சார உற்பத்தி பாதிக்கும் நிலையும் உள்ளது. நிலக்கரி அவசியமாக தேவைப்படுவதால்தான் இரண்டாம் சுரங்கம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. நீங்கள் பந்த் செய்தால், விசிக போட்டிக்கு கடையை திறந்தாலும் திறப்பார்கள். இதனால் மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால் பந்தை கைவிடுங்கள். விவசாயிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் சார்பாக மூத்த அமைச்சர் ஒருவர் அன்புமணியிடம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

மீட்டிங்
இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சித் தலைவர் திருமா, முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர். சுமார் 1 மணி நேரம் இவர்கள் தீவிரமாக ஆலோசனை செய்தனர். அதில், கடலூரில் என்எல்சி விரிவாக்கம் செய்ய கூடாது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். விவசாய நிலங்கள் மேலும் பாதிக்கப்படும். மக்கள் அனுமதியின்றி இவர்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்துகிறார்கள். அரசு தலையிட்டு என்எல்சியின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இவர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications