வெல்லத்தை பாருங்க.. ஹிந்தியை வரவேற்க திமுக முடிவு எடுத்துவிட்டதா?.. பாஜக, அதிமுகவுக்கு வந்த கோபம்
திமுகவின் இந்தி திணிப்பு என்று ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
சென்னை: மக்களின் வரிப்பணத்தின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான பொருட்களை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதும், அந்த பொருட்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டு இருப்பதும் எந்த வகையில் நியாயம்? இந்தி திணிப்பை அரசே மேற்கொள்ளலாமா அல்லது இந்தியை வரவேற்க திமுக முடிவு எடுத்துவிட்டதா? என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று பொங்கல் பண்டிகையாகும்.. அந்த வகையில் இந்த முறை பச்சரிசி, வெல்லம், நெய், செங்கரும்பு உள்பட 625 ரூபாய் மதிப்பு கொண்ட 20 பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.
ஆனால், திமுக அரசு பொங்கலுக்கு பரிசுப் பணம் அறிவித்திருக்கவேண்டும் என்பது மக்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது.. அதேநேரம் இந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொடர்பாக, வேறு சில சர்ச்சைகளும் வெடித்துள்ளன.

திமுக
பொங்கல் பரிசு தொகுப்புக்காக தமிழக அரசு கொள்முதல் செய்துள்ள பெரும்பாலான அத்தியாவசிய பொருட்கள் குஜராத், மராட்டியம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது... 20 பொருட்களில் தமிழகத்தில் செங்கரும்பும், உப்பும் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்..

திமுகவின் இந்தி திணிப்பு
வீட்டு சமையலுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் எத்தனையோ பெரிய நிறுவனங்கள் நம் தமிழகத்தில் இருந்தும், இந்த பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டுள்ளதாகவும், தமிழக நிறுவனங்கள் எதிலும் ஒரு பொருள் கூட வாங்கப்படாமல் அவை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.. அதுமட்டுமின்றி, வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பல பொருட்களின் பாக்கெட்டுகள் மீதும் இந்தியில் வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன...

திமுக போராட்டம்
திமுக அரசு இந்தியை திணிக்கக்கூடாது என்று 60 வருடங்களுக்கும் மேலாக போராடி வருகிறது... ஆனால் இப்போது இரண்டே கால் கோடி வீடுகளில் இந்தி திணிக்கப்பட்டுள்ளது என்றும் புகார்கள் ஆங்காங்கே கூறப்பட்ட வருகின்றன. இதைதான் சில தினங்களுக்கு முன்பு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் கேள்வி எழுப்பியிருந்தார்..

மர்மம் என்ன?
"தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழகத்தில் தயாரிப்போம் என்றெல்லாம் குரல் கொடுத்த திமுக அரசு, பொங்கல் பையுடன் வழங்கப்படும் 20 பொருட்களில் பெரும்பாலானவற்றை தமிழகத்தில் தயாரிக்கும் நிறுவனங்களிடத்தில் வாங்காமல் குஜராத் உள்ளிட்ட வெளிமாநில நிறுவனங்களிடத்தில் வாங்குவதன் மர்மம் என்ன?அனைத்திலும் இந்தியில் எழுதப்பட்டிருக்கிறதே? ஒரு வேளை, திமுகவினர் வட மாநிலங்களில் வர்த்தகம் செய்கிறார்களோ? அல்லது அங்கே தான் பேரம் படிந்ததா? ஏன்? தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஓபிஎஸ்
இதைதான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் கேள்வி எழுப்பி உள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்லில் இந்தியில் எழுதினால் இந்தி திணிப்பு என்று கூறும் திமுக, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான பொருட்களை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதும், அந்த பொருட்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டு இருப்பதும் எந்த வகையில் நியாயம் ?

திமுக அரசு
இந்தி திணிப்பை அரசே மேற்கொள்ளலாமா அல்லது இந்தியை வரவேற்க திமுக முடிவு எடுத்துவிட்டதா? தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்க தமிழ்நாட்டில் நிறுவனங்களே இல்லையா? இது தமிழ் மொழியையும் , தமிழர்களையும் அவமதிக்கும் செயல் இல்லையா? எந்த அடிப்படையில் பிற மாநிலத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது? தமிழ் நாட்டு நிறுவனங்கள் லாபம் அடையக் கூடாதா? பொருட்களுடன் ஏன் துணிப்பையை வழங்கப்படவில்லை? இவற்றிற்கான பணம் கொடுக்கப்பட்டு விட்டது என்றால் எவ்வளவு கொடுக்கப்பட்டது? மீதி எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.

திமுக
இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் செய்திகள் வருகின்றன. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்பதுதான் எதார்த்தம். இதைவிட ரொக்கமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று மக்கள் கூற ஆரம்பித்து விட்டார்கள். இந்த திட்டத்தினால் தமிழ்நாடு மக்களுக்கு எந்தவித பலனுமில்லை. பயனாளிகள் யார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். மொத்தத்தில் இந்த திட்டம் படுதோல்வி அடைந்து இருக்கிறது, என்பதுதான் உண்மை.

அதிருப்தி
மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வேட்டி, சேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்ற புகாரும் ஆங்காங்கே எழுந்துள்ளது. இதையெல்லாம் நான் சுட்டிக் காட்டுவதற்கு காரணம் மக்கள் படும் அவதி ,மக்களிடையே காணப்படும் குறைகள், மக்களிடையே நிலவும் அதிருப்தி ஆகியவற்றை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வர வேண்டிய கடமை, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது.

திமுக அரசு
மக்களின் மேற்படி புகார்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக முதலமைச்சருக்கு உண்டு, எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு இந்த திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இதுபோன்ற தவறுகள் இனிவரும் காலங்களில் நிகழா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications