"ஆட்சியில் பங்கு இல்லை என திமுக எங்களிடம் சொல்லவில்லை.." திட்டவட்டமாக சொன்ன கிரிஷ் சோடங்கர்
சென்னை: கூட்டணி குறித்து டெல்லி தலைமைக்கு அறிக்கை அளித்துள்ளதாகக் கூறிய கிரிஷ் சோடங்கர், கூட்டணி குறித்து டெல்லி தலைமை தேவையான முடிவை எடுக்கும் என்றும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், ஆட்சியில் பங்கு இல்லை என்று திமுக தரப்பு இதுவரை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை என்றும் கிரிஷ் சோடங்கர் கூறினார்.
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இதில் திமுக காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் எழுந்துள்ளது. அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் கூறும் கருத்துகள் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
ஒரு பக்கம் ஆட்சியில் பங்கு தேவை எனக் காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திமுக தரப்பு திட்டவட்டமாகச் சொல்கிறது. இதனால் கூட்டணியில் சிக்கல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தமிழகக் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இது தொடர்பாகச் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
திங்கள் இரவு சென்னைக்கு வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் எந்தவொரு சிக்கலும் இல்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், கூட்டணியில் பங்கு இல்லை என திமுக தங்களிடம் இதுவரை சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லி தலைமை முடிவெடுக்கும்
இது தொடர்பாக கிரிஷ் சோடங்கர் மேலும் பேசுகையில், "நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே திட்டவட்டமாகச் சொல்லிவிட்டோம். தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி தலைமையிடம் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி தலைமை உரிய முடிவை எடுக்கும். அதுவரை கூட்டணி தொடர்பாக யாரும் பேசக்கூடாது. யாருடன் கூட்டணி வைக்கலாம், யாருடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதை டெல்லி தலைமையே முடிவு செய்யும்" என்றார்
சிக்கல் இல்லை
கடந்த காலங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்தவொரு சிக்கலும் இல்லாத நிலையில், இந்த முறை மட்டும் ஏன் இவ்வளவு சிக்கல் எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சோடங்கர், "திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்தவொரு சிக்கலும் இல்லை.. நாங்கள் காத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் மக்கள் யாரும் என்டிஏ கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக மக்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். மதச்சார்பற்ற கொள்கை கொண்டவர்கள். எனவே, மக்களைப் பிரித்து அரசியல் செய்யும் பாஜகவையும் அவர்களுடன் கை கோர்த்து இருப்போரையும் தமிழ்நாடு மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள்" என்று பதிலளித்தார்.
கூட்டணி ஆட்சி?
திமுக கூட்டணி வேண்டாம் என்று குரல்கள் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு கிரிஷ் சோடங்கர், "காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே கூட்டணி குறித்த அறிக்கையைத் தயாரித்து தலைமையிடம் சமர்ப்பித்துள்ளோம். டெல்லி தலைமை எது நல்லதோ அந்த முடிவை எடுப்பார்கள்" என்றார்.
கூட்டாட்சி இல்லை என திமுக தரப்பு சொல்லிவிட்டதே என்ற கேள்விக்கு அவர், "திமுக இது தொடர்பாக எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. இவை எல்லாம் வெளியாகும் தகவல்களே.. அதிகாரப்பூர்வமாகக் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும்போது தான் அவர்கள் நிலைப்பாடு தெரிய வரும். எங்கள் நிலையையும் எடுத்துச் சொல்வோம். அதன் பிறகு பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என்றார்.
-
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
வாஷிங் மெஷின் வாங்க ரூ.8000! அடமானமில்லா 5 லட்சம் கடன்! வைரலாகும் திமுக கனிமொழியின் முதலீடு தந்திரம் -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
தர்மபுரியில் மாறுது கணக்கு! சௌமியா அன்புமணியை அதிரவைத்த ராமதாஸின் அந்த ஒரு முடிவு! பலே -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை!












Click it and Unblock the Notifications