திமுக MP, MLAக்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! 13ஆம் தேதி நிகழ்ச்சி! மாவட்டச் செயலாளர்களை பாருங்க!
சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரும் சனிக்கிழமை அன்று முக்கிய வேலை ஒன்றை கொடுத்திருக்கிறது அக்கட்சியின் தலைமை.
அதாவது, திமுக ஐடி விங் சார்பில் நடத்தப்படவுள்ள சோசியல் சைட்ஸ் குறித்த பயிற்சி வகுப்பில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் அவர்களுடன் திமுகவில் உள்ள அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகளும் இதில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்டக் கழகத்தை அணுகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு பின் வருமாறு;
'''தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி'யின் முன்னெடுப்பில் வருகிற 13.01.2024 (சனிக்கிழமை) அன்று மாவட்டக் கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான “சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு” நடைபெறுகிறது.
இப்பயிற்சி வகுப்பில் கழக இளைஞர் அணி - மாணவர் அணி மகளிர் அணி - தொண்டர் அணி - தொழிலாளர் அணி வழக்கறிஞர் அணி - பொறியாளர் அணி - மருத்துவ அணி விளையாட்டு மேம்பாட்டு அணி - சிறுபான்மைநல உரிமைப் பிரிவு விவசாய அணி - விவசாயத் தொழிலாளர் அணி - சுற்றுச்சூழல் அணி - அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள, அந்தந்த மாவட்டக் கழகத்தை அணுக வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications