மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளை முழுமையாக அறிய... STALIN ANI செயலியை அறிமுகப்படுத்திய திமுக..!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் 'ஸ்டாலின் அணி' (STALIN ANI) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது திமுக.
இந்த செயலியை கூகுள் பிளேஸ்டோருக்கு சென்று பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால், மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரங்கள், எந்தெந்த தேதியில் அவருக்கு என்னென்ன பணிகள் இருக்கின்றன உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும், அதுமட்டுமல்லாமல் மு.க.ஸ்டாலினின் அறிக்கைகள், முகநூல், ட்விட்டர் பதிவுகள், உரைகள் என அனைத்தையும் இந்த செயலி மூலம் காண முடியும். சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள பிரச்சார பயணத்திட்ட விவரங்களும் இனி வரும் நாட்களில் அந்த செயலியில் இணைக்கப்பட உள்ளது.
திமுக தொண்டர்கள் தங்கள் பிறந்தநாள் தேதியை குறிப்பிட்டு பெயரை பதிவு செய்தால் அவர்களுக்கு பிறந்தநாளன்று ஸ்டாலினிடம் இருந்து வாழ்த்துக்கடிதம் வரும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுமக்கள் இந்த செயலி மூலம் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தை எளிதாக தொடர்பு கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஸ்டாலினை சந்திக்க விரும்புவர்கள் ஸ்டாலின் அணி செயலியில் தங்கள் விவரத்தை பதிவு செய்தால் அதன் மூலம் ஸ்டாலினை சந்திப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படவிருக்கிறது. STALIN ANI செயலி அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் ஆயிரக்கணக்கானோர் இதனை பதிவிறக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்!











Click it and Unblock the Notifications