Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணி "மாஸ்"- காஞ்சிபுரத்தில் செப்.28-ல் மு.க.ஸ்டாலின் மேடையேற்றும் 20 தலைவர்கள் யார் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28-ந் தேதி நடைபெற உள்ளது. திமுகவின் காஞ்சிபுரம் பவள விழா பொதுக் கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள 20 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் அத்தனை கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் அணிவகுக்க செய்கிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகள் தேர்தல் களத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றன.

tamilnadu assembly election 2026 dmk mk stalin 2026

விஜய் கட்சி: 2026 தேர்தல் களத்தில் நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குகிறது. ஆளும் கட்சி திமுக என்பதால் அந்த கட்சியை விமர்சித்துதான் நடிகர் விஜய் களமாடுவார் என்கிற எதிர்பார்ப்பை கடந்த சில நாட்களாக மடைமாற்றி வருகிறார் விஜய். திமுக பாணியில் திராவிட மூலவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை கொண்டாடுகிறார் நடிகர் விஜய். அத்துடன் தந்தை பெரியார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். இதனால் நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக ஆகியவை கடுமையாக விஜய்யை விமர்சித்து வருகின்றன.

திருமா பற்ற வைத்த நெருப்பு: இந்த பரபரப்புக்கு நடுவே திமுக கூட்டணியில் உள்ள விசிக, திடீரென மது ஒழிப்பு மாநாட்டை நடத்துவதாக அறிவித்தது. அதில் கூட சிக்கல் இல்லை. இந்த மது ஒழிப்பு மாநாட்டுக்ககு அதிமுகவை அழைப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தது மிகப் பெரும் அரசியல் புயலை உருவாக்கிவிட்டது. திமுக கூட்டணியை சிதைக்கவே விதை தூவுகிறார் திருமாவளவன் என்கிற விமர்சனங்கள் எழுந்தன. மது ஒழிப்பு பஞ்சாயத்து முடிவதற்குள் ஆட்சியில் -அதிகாரத்தில் பங்கு என்ற பழைய கோஷத்தை திடீரென திருமாவளவன் எழுப்ப.. ஆஹா திமுக கூட்டணி உடையத்தான் போகிறது என்கிற கருத்து வலுவானது.

தலைகீழான திருமா நிலைப்பாடு: ஆனால் அத்தனையையும் தலைகீழாக்கியது போல முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர், திமுக கூட்டணியில் நெருடலும் இல்லை விரிசலும் இல்லை என திருமாவாளவன் விளக்கம் அளித்தார். அத்துடன் திமுக கூட்டணியிலேயே விசிக நீடிக்கிறது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

திமுக கூட்டணி கூட்டம்: இந்த பின்னணியில்தான் காஞ்சிபுரத்தில் திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்தில் திமுகவின் அத்தனை கூட்டணிக் கட்சித் தலைவர்களும் மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர்.

tamilnadu assembly election 2026 dmk mk stalin 2026

யார் யார்?: திமுகவின் காஞ்சிபுரம் பவள விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் திமுக கூட்டணித் தலைவர்கள் விவரம்:

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
சிபிஎம் செயலாளர் பாலகிருஷ்ணன்
சிபிஐ செயலாளர் முத்தரசன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன்
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்
மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்
தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார்
சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன்
மக்கள் விடுதலைக் கட்சி முருகவேல்ராஜன்
மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ்
ஆதித் தமிழர் பேரவை தலைவர் அதியமான்
தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப்
வல்லரசு பார்வர்ட் பிளாக் நிறுவனர் தலைவர் பி என் அம்மாவாசி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+