"பெறாத பிள்ளை" தூது பலிக்கல! பாமக ராமதாஸின் கூட்டணி யாரோடு? கிழிந்த காகிதம், திமுக ஒரு உடைந்த கப்பல்?
சென்னை: தமிழக தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. இதில், வடதமிழகத்தின் முக்கிய சக்தியான பாட்டாளி மக்கள் கட்சி, தற்போதைய சூழலில் ஒரு மிகப்பெரிய அரசியல் குழப்பத்திலும், அதே சமயம் ஒரு முக்கிய டர்னிங் பாயிண்ட்டிலும் நிற்பதாக தெரிகிறது.. இன்னும் கூட்டணி முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிக்கவில்லை.. அதேசமயம் யாருடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்ற கணக்குகளும் அரசியல் களத்தில் வட்டமடித்து வருகின்றன..
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவும் மாறுபட்ட அரசியல் கருத்துகள், அக்கட்சிக்குள் பெரும் புயலை வீச வைத்தபடி உள்ளது...

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் தரப்பை பொறுத்தவரை, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய ஆரம்பத்தில் இருந்தே அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.. இறுதியில் அதிமுக தரப்பில் பாமகவுக்கு 17 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது..
ஆனால், எக்காரணம் கொண்டும் பாமகவை என்டிஏ கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்பதில் அன்புமணி பிடிவாதமாக இருப்பதால், அதிமுக தலைமை நேரடியாக ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்த தயக்கம் காட்டுகிறதாம்.. இந்த இடைவெளியை பயன்படுத்தி பாஜக மட்டுமே ராமதாஸுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
திமுக பாமக கூட்டணி?
மற்றொருபக்கம், ஒரு வியூகமாக திமுக கூட்டணியை நோக்கி ராமதாஸ் தரப்பு காய் நகர்த்தியது. முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியை பாராட்டி ராமதாஸ் கருத்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தவே செய்தது..
ஆனால், பாமகவின் வருகையை விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக எதிர்ப்பது திமுகவுக்கு பெரும் முட்டுக் கட்டையாக உள்ளது. 14 வருஷங்களுக்கு முன்பு எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாகவும், பாமகவுடன் கூட்டணி சாத்தியமில்லை என்றும் திருமாவளவன் கையை விரித்துவிட்டார்.
பெறாத பிள்ளை - தூது
"ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன்" என்று பாமக எம்.எல்.ஏ அருள் மூலமாக தூது அனுப்பியும் திருமாவளவன் இறங்கி வரவில்லை... திமுகவும் தனது நம்பிக்கைக்குரிய விசிகவை இழக்க விரும்பாததால், ராமதாஸின் திமுக கனவு தற்காலிகமாக முடங்கியிருப்பதாகவே தெரிகிறது...
இந்த இக்கட்டான சூழலில், நடிகர் விஜய்யின் தவெகவுடன் பாமக கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தலித் வாக்கு வங்கியில் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தவெக நினைக்கிறதாம்.. அதனால் பாமகவின் கூட்டணியை நிராகரித்துவிட்டதாகவும் செய்திகள் பரபரக்கின்றன..
இதனால் ராமதாஸ் தரப்பு மீண்டும் திமுகவை நோக்கியோ அல்லது வேறு ஒரு கூட்டணியை நோக்கியோ நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கிழிந்த காகிதங்கள், ஓட்டை கப்பல்
அன்புமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக அரசை "ஓட்டைக் கப்பல்" என்றும், "மக்கள் தூக்கி எறிவார்கள்" என்றும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"திமுக அரசு என்பது மக்களின் கோபம், கொந்தளிப்பு என்ற பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல். அதை கிழிந்த காகிதங்களைக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒட்டவைக்கப் பார்க்கிறார். அவரது இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்று போகும்" என்று அன்புமணியின் அறிக்கையானது சில குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது..
அன்புமணியின் அந்த அதிரடி விமர்சனம், ராமதாஸின் நகர்வுகளைத் தடுத்து, பேச்சுவார்த்தைகளைக் குலைப்பதற்காகவே ஒரு முயற்சியா தெரியவில்லை..
டாக்டர் ராமதாஸ் கூட்டணி யாரோடு
ஆனால் மூத்த தலைவர் ஜி.கே. மணி கருத்தின்படி, பாமக தனித்துப் போட்டியிடப் போவதில்லை என்பதும், கூட்டணி அமைத்தே களம் காணும் என்பதும் உறுதியாகியுள்ளது. எனினும், டாக்டர் ராமதாஸ் தனது அரசியல் அனுபவத்தை கொண்டு அதிமுகவுடன் இணக்கமாவாரா அல்லது கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இடம் பிடிப்பாரா என்பதுதான் இப்போதைய தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வி... பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications