"இந்தி படிக்க வேண்டாம் என்று யார் தடுத்தது?" திமுக எம்பி திருச்சி சிவா கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் இந்தியை படிக்க வேண்டாம் என்று யார் தடுத்தது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் அரவணைக்கும் தோழமை என்ற பெயரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர் பாபு, திமுக எம்பி திருச்சி சிவா, சுப வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், மக்களுக்கான திட்டங்கள் செய்திருக்கிறோம் என்பதற்கு வரலாறு வேண்டும், செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு திட்டங்கள் வேண்டும். இது அத்தனையும் திமுகவுக்கு இருக்கிறது.

விடுதலையின் போது ஆட்சி மொழி
இந்தியாவில் ஆட்சி மொழிக் குழு என்று உள்ளது. அது அரசியல் சட்டத்திற்கு பின், 1963ல் ஆட்சி மொழி சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், நீண்ட ஆண்டுகளுக்கு பின் குழு உருவாக்கப்பட்டது. நாடு விடுதலைப் பெற்றபோது, நமது ஆட்சி மொழி இந்தி கிடையாது. இந்தியை யார் படிக்க வேண்டாம் என்று கூறியது.

இந்தி திணிப்பு
இந்தி படிக்கக் கூடாது என்று சொல்லுகிறவர்களாக திமுகவினர் இருந்தால், இந்தி பிரச்சார சபாவின் தலைமை இடம் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. நாங்கள் திணிப்பவர்களையும், திணிப்பையும் தான் எதிர்க்கிறோம். இந்தியா என்பது ஒருநாடு அல்ல. இது பல நாடுகளின் தொகுப்பு. அதனால் தான் ஒன்றியம் என சொல்லுகிறார்கள்.

ஒன்றியம் விளக்கம்
நாடு என்பதை மாநிலங்கள் என்று பின்னாளில் சொற்றொடராக மாற்றிக்கொண்டனர். ஒரு நாடு என்றால் ஒரு மொழி, ஒரு இனம், ஒரு கலாச்சாரம் இருக்க வேண்டும். ஆனால் பல மொழி, பல இனம், பல கலாச்சாரம், பல பண்பாடுகள், பல மதங்கள் உள்ள நாட்டில் நாம் ஒன்று சேர்ந்த இருப்பதுதான் கூட்டாட்சி தத்துவம். வெள்ளைக்காரர் காலத்தில் இங்கு ஆங்கிலம் தான் ஆட்சி மொழியாக கொண்டு வரப்பட்டது தான் தொடர்ந்து இருந்தது.

இந்தியை திணிக்க முடியாது
தற்போது அமித் ஷா தலைமையிலான குழு குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ள அறிக்கையை உடனடியாக அமல்படுத்திட முடியாது. உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி தான் இனி பயிற்று மொழியாக இருக்கும் என்பது உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாது. அந்த ஆலோசனைகளை, பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும். அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம். மாநிலங்களுக்கு அனுப்பப்படும் போது அமைச்சர்கள் பார்த்துக் கொள்வார்கள். தமிழை காப்போம் என்று பேசியதன் விளைவு தான், இன்று பல்வேறு மாநிலங்களில் எதிரொலிக்கிறது என்று தெரிவித்தார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications