வல்லரசாக்க பாடுபடும் மோடினு பாராட்டிட்டு.. திமுகதான் பாஜக என பேசுவதா? விஜய்க்கு கிளம்பும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்திருந்த முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் திமுகதான் பாஜக என்றும், டெல்லியில் பாஜகதான் திமுக எனவும் விமர்சித்திருந்தார். ஆனால், அரசியல் களத்தில் பாஜகவை பட்டும் படாமலும் விமர்சிக்கும் விஜய்.. இப்படி பேசலமா? என்று எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

விஜய் பேசியது இதுதான், "திமுகவும் பாஜகவும் கொள்கை ரீதியாக எதிர் எதிர் துருவங்கள் போல வெளியில் சண்டை போட்டுக் கொண்டாலும், திரை மறைவில் தங்களுக்குள் ஒரு சுமூகமான உடன்பாட்டை வைத்துள்ளனர். தமிழகத்தில் பாஜகவின் தேவைகளை நிறைவேற்றும் கட்சியாக திமுகவும், டெல்லியில் திமுகவின் அரசியல் நலன்களை பாதுகாக்கும் கட்சியாக பாஜகவும் செயல்படுகின்றன. மொத்தத்தில் தமிழகத்தில் உள்ள பாஜக தான் திமுக டெல்லியில் உள்ள திமுக தான் பாஜக" என்று விஜய் விமர்சித்து இருந்தார்.

Vijays statement

ஆனால், உண்மையில் யார் பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை, கடந்த கால நிகழ்வுகளை பார்த்தால் தெரிந்துவிடும் என்று திமுகவினர் விஜய்க்கு பதிலடி கொடுத்திருக்கின்றனர்.

விஜய்க்கு 3 விஷயங்களை திமுகவினர் நினைவூட்டுகின்றனர். முதல் விஷயம், பிரதமர் நரேந்திர மோடியை ஆஹா, ஓஹோ என பாராட்டி பதிவிட்டது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர். "இந்தியாவை வல்லரசாக உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் வழிநடத்தும் மதிப்பிற்குரிய பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று விஜய் பதிவிட்டிருந்தார். இதை மேற்கோள் காட்டி திமுகவினர் விஜய்க்கு கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அதேபோல, முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பின்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய சுற்றறிக்கையின்படி, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக இசைக்கப்பட்டது. இது மாநில மரபுகளை மீறிய செயல் என திமுக, இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. அதேபோல மனோன்மணியம் சுந்தரனால் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கூட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்தும் கொடுக்காததும் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதற்கெல்லாம் விஜய் என்ன ரியாக்ட் செய்தார்? என்று திமுகவின் கேட்டு வருகின்றனர்.

மூன்றாவதாக இன்னொரு விஷயத்தையும் உடன் பிறப்புகள் கேள்விகளாக முன்வைத்திருக்கின்றனர். அதாவது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரியதாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது உடனடி ஆக்ஷன் எடுத்த விஜய், ஏன் இதை விட மோசமாக பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

ஆக மொத்தத்தில், இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது.. திமுகதான் பாஜகவா? அல்லது தவெகதான் பாஜகவா? என்பது தெளிவாக தெரிகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+