நாலா பக்கமும் டிரோல்.. அதிகரிக்கும் நெருக்கடிகள். கப்சிப்பென இருக்கும் திமுக.. காத்திருக்கு அதிரடி!

கூடும் நெருக்கடிகள்.. அமைதி காக்கும் திமுக.. பலே ஐடியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லா பக்கமும் டிரோல் செய்தாலும்.. அதிமுக, பாஜக, ரஜினி தரப்பு என நாலா பக்கமும் நெருக்கினாலும் சரி.. அசராமல் அமைதி காத்து வருகிறது திமுக.. ஆனால் இந்த அமைதி புயலுக்கு வரும் முன்பு அமைதி என்பதே உண்மை!

3 நாள்கூட தாக்குபிடிக்க மாட்டார் என்று பகிரங்கமாகவே முதல்வரை விமர்சித்தது எதிர்க்கட்சிகள்... மத்திய அரசின் மீதான அதிருப்தியினால் எம்பி தேர்தலின்போது அதிமுக கோட்டை விட்டது உண்மை என்றாலும் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்லதல்களில் விட்டதையும் பிடித்துவிட்டது!!!

அதே சமயம், என்பிஆர், சிஏஏவுக்கு எதிரான விஷயங்களில் அதிமுக அடுத்தடுத்த அதிரடிகளை காட்டி வருகிறது.. அத்துடன் திமுகவை பார்த்து கேள்வி எழுப்பியும், அறிவுறுத்தவும் தொடங்கிவிட்டது! ஆளும்தரப்பு ஒவ்வொரு விஷயத்தையும் அணுகும்போக்கை கண்டு திமுக அமைதியே காத்து வருகிறது.. டென்ஷன் ஆகிவிடவில்லை.. எந்த பதிலடியும் தரவில்லை.. எந்த காரசார அறிக்கை, ட்வீட்களும் பதிவிடவில்லை!

 தலித் தலைவர்

தலித் தலைவர்

அதேபோல, பாஜகவை பொறுத்தவரை தலித் ஒருவரை மாநில தலைவராக நியமனம் செய்துவிட்டு, இதேபோல உங்களில் ஒரு தலித் தலைவரை காட்டுங்களேன், பெண் தலைவர் ஒருவரையேனும் காட்டுங்களேன்,, பட்டியலின தலைவரை முன்னிறுத்தி அவர்களின் கீழ் நீங்கள் செயல்படுங்களேன் என்று கேள்விகளை எழுப்ப தொடங்கி உள்ளதையும், திமுக அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.. இவர்களுக்கும் எந்த பதிலையும் சொல்லவில்லை... மாற்று கருத்தையும் முன் வைக்கவில்லை!

 அம்மா நாளிதழ்

அம்மா நாளிதழ்

இதேதான் ரஜினி விஷயத்திலும்.... குபேரன்கள் என்று அதிமுகவையும், வாழ்வா, சாவா என்று திமுகவையும் ரஜினி குறிப்பிட்டு விமர்சித்தாலும், இதற்கு பதில் அளித்தது என்னமோ அதிமுக மட்டுமே.. அதுவும் அதிகாரப்பூர்வமான "அம்மா நாளிதழில்" இதை பற்றி கட்டுரையே வெளியிட்டிருந்தனர்... இது ஒருவகையில் ஆச்சரியம்தான்.. இதுவே ஜெயலலிதாவாக இருந்திருந்தால், இப்படி உடனே பதிலடி தந்திருக்கவே மாட்டார்.. ரஜினி பேச்சை ஒரு பொருட்டாகவும் மதித்திருக்க மாட்டார்.. ஆனால் அதிகாரமிக்க இடத்தில் உட்கார்ந்து கொண்டு இப்படி பதிலளித்ததை பார்த்தால், ரஜினியை கண்டு இதுவரை அதிமுக அஞ்சி கொண்டிருந்ததா என்ற சந்தேகம் எழுந்தது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஆனால் திமுக இதையும் சட்டை செய்யவே இல்லை.. ரஜினியை தனக்கு நிகராககூட அது கருதவில்லை.. அதனால்தான் நேரடியாக ஸ்டாலினை சுட்டிக்காட்டி ரஜினி பேசியும் ஒரு கருத்தையும் யாரும் முன்வைக்கவில்லை.. காரணம், கருத்து சொல்லவும், விமர்சிக்கவும்கூட தனக்கு சமமானவர்களாக இருக்க வேண்டும் என்றே திமுக கருதுவதுபோல உள்ளது!

அமைதி

அமைதி

எனினும், பாஜக, அதிமுகவை இப்படி அலட்சியம் செய்ய முடியாது.. அதே சமயம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது ரஜினி சொல்லாமேலேயே ஸ்டாலினுக்கும் புரியும்.. முக அழகிரியை வைத்து தனக்கு எதிராக ஸ்கெட்ச் போடுவது தெரிந்தும்கூட திமுக அமைதி காப்பதற்கு காரணங்கள் உள்ளன! முதலில் உள்ளடி, உட்கட்சி பூசல்களை களையும் முயற்சியில் திமுக இறங்கி உள்ளது.. யாரெல்லாம் சரியாக வேலை பார்க்கவில்லையோ, அத்தகைய மா.செ., முக்கிய நிர்வாகிகள் என அத்தனை பேரையும் களையெடுக்கும் முடிவுக்கு பி.கே. வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.. அதேபோல, ஐடி-விங்-கிலும் பிகேயின் ஆதிக்கம் நுழைவதாக கூறப்படுகிறது.

 முழு கவனம்

முழு கவனம்

உள்கட்சியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்தாலே பாதி வெற்றி என்பது பிகேவின் எண்ணமாம்.. அதனால் பாஜக, அதிமுக, என யார் எவ்வளவு பிரச்சனை தந்தாலும், குழப்பம் ஏற்படுத்தினாலும், அவைகளை டீவியேட் செய்யும் உத்தி என்பதை திமுக நன்றாக அறிந்துள்ளது.. அதனால்தான் எதையுமே காதில் போட்டு கொள்ளாமல் அதன் முழுக் கவனமும் இப்போது சட்டசபைத் தேர்தல் மட்டுமே நோக்கி எடுத்து வைக்கப்படுகிறது.

 புலி பாய போகிறது

புலி பாய போகிறது

சுருக்கமாக சொல்ல போனால், முழுக்க முழுக்க திமுக பக்காவாக தயாராகி வருகிறது... அதற்கான எல்லா வேலைகளையும் படு ரகசியமாக செய்து கொண்டிருக்கிறது... இவைகள் எல்லாம் முடிந்த பின்னரே அடுத்தடுத்து அதிரடியை காட்டும் திட்டம் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது!! அதனால் புலி பதுங்குகிறதே என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் என்பதே உடன்பிறப்புகளின் உரத்த கோரிக்கை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+