திமுக ஸ்டன் ஆகிடுச்சு.. நானே நினைச்சு பார்க்கல.. புஸ்ஸியிடம் குஷியாக சொன்ன விஜய்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் மிகவும் தெம்பாக இருக்கிறார். பூத் கமிட்டி கூட்டம் கொடுத்த ஹைப் தான் இதற்கு காரணம் என்கிறார்கள். கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு கூட, இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நினைக்கவில்லையாம்.

ஆனால், கூட்டத்திற்கு வந்தபிறகு, கட்சியினர் ஆர்பரித்த சம்பவங்கள், இடம் இல்லாமல் வெளியே காத்திருந்த முகவர்கள், போராடி உள்ளே சென்ற முகவர்கள், கூட்டத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் தவித்த தவெக தொண்டர்கள் என ஒரு மாநாடு மாதிரியான ஹைப் உருவானதில் ஏகத்துக்கும் உற்சாகம் அவரை தொற்றிக்கொண்டது.

vijay tvk tamilaga vetri kazhagam

நீண்ட நேரம் பேசிய விஜய்

முதல் நாள் நிகழ்ச்சி முடிந்ததும், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ராமன் மற்றும் கொள்கைப் பரப்பு செயலாளர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் விஜய். அப்போது, இந்தளவுக்கு நம் கட்சியினர் வெறித்தனமாக இருப்பார்கள்னு நானே எதிர்பார்க்கவில்லை. பூத் கமிட்டி வலிமையாக இருந்தால் தான் தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியும் என உணர்ந்துதான் பூத் கமிட்டி கூட்டத்தைக் கூட்டுங்கள் என சொன்னேன்.

நான் எதிர்பார்த்ததை விட பூத் கமிட்டி பலமாக இருக்கிறது'' என்று தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் விஜய். அதேபோல, 2 நாள் கூட்டத்தை முடித்து விட்டு கோவையைவிட்டு கிளம்பியிருந்தனர். மறுநாள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுக்கும் துறையின் முக்கிய அதிகாரி ஒருவரிடமிருந்து புஸ்சி ஆனந்துக்கு ஒரு தகவல் கொடுத்திருக்கிறார்.

பரபரப்பு இருந்தது இல்லை

புஸ்சியிடம் பேசிய அந்த அதிகாரி, "பிரதான கட்சிகளின் பூத் கமிட்டிக் கூட்டம் கூட இந்தளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியதில்லை. அவர்களால் நடத்தவும் முடிவதில்லை. கோவைக்கு அருகே உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகளை ஓரிடத்தில் அழைத்து வந்து கூட்டம் நடத்தியதால் இந்த பரபரப்பு ஏற்பட்டது என ஆட்சி தலைமைக்கு நாங்கள் தகவல் தந்திருந்தாலும், நிஜத்தில் விஜய் கூட்டிய பூத் கமிட்டி கூட்டம் ஆளும் தரப்புக்கு சற்று பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. விஜய்க்கு மக்களிடம் உள்ள ஆதரவு திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. திமுகவிற்கு இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆடிப்போய் உள்ளது.

விஜய்க்கு இருக்கும் ஆதரவு அப்படியே வாக்குகளாக மாறும் என்று சொல்லவில்லை. இந்த ஆதரவு வாக்குகளாக மாறலாம். மாறாமல் போகலாம். என்னவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இந்த ஆதரவை பார்த்து திமுக பயந்துவிட்டது. இவ்வளவு ஆதரவு இருப்பதை பார்த்து திமுகவிற்கு அச்சம் உள்ளது. திமுக வாக்குகளை அவர் உடைக்க போகிறார் என்ற அச்சம் வந்துவிட்டது இங்கே.

விஜய்யிடம் இதைச் சொல்லி விடுங்கள் " என்று அவர் தெரிவித்திருக்கிறார். (விஜய், கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே புஸ்சியை தனது நட்புக்குள் கொண்டு வந்து விட்டார் அந்த அதிகாரி) அதிகாரியின் தகவலுக்கு நன்றியை தெரிவித்த புஸ்சி ஆனந்த், அதிகாரி சொன்ன தகவலை அப்படியே விஜய்க்கு பாஸ் செய்திருக்கிறார். அதற்கு அவர், "இதைத்தான் எதிர்பார்த்தேன். நம்மை எள்ளி நகையாடும் நம்முடைய அரசியல் எதிரிக்கு ஒரு ஜெர்க்கை கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அந்த ஜெர்க் ஏற்பட்டிருப்பது சந்தோசம் தான்" என்று சொல்லியிருக்கிறார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+