திமுகவிற்கு இதுவரை இல்லாத சவால்.. எல்லா பக்கமும் சுத்தி நிக்கிறாங்களே.. லேசான சறுக்குனாலும் போச்சு!
சென்னை: ஆளும் திமுகவிற்கு தற்போது தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அரசியல் ரீதியாக அந்த கட்சி இதுவரை சந்தித்த பெரிய சவால்களில் முக்கியமான சவால் ஒன்றை சந்திக்க போகிறது.
திமுக என்ற கட்சி சந்திக்காத சவால்கள் இல்லை. கட்சி தொடங்கிய போதே வலிமையான காங்கிரசை எதிர்கொண்டது.. தொடர்ந்து திமுக உடைந்து அதிமுக உருவானது, அதிமுகவில் எம்ஜிஆர் என்ற பெரிய பிம்பத்தை எதிர்கொள்ள திமுக பட்ட பாடு, இந்திரா காலத்து எமர்ஜென்சி பிரச்சனைகள், வைகோ திமுகவை உடைத்துக்கொண்டு மதிமுக தொடங்கியது என்று திமுக காணாத சவால்கள் சிக்கல் இல்லை.

எம்ஜிஆர் 3 முறை தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்தது, வைகோ கட்சியை உடைத்தது, ஜெயலலிதா ஆட்சிக்கு வர, விஜயகாந்த் எதிர்க்கட்சி ஆக, திமுக எதிர்க்கட்சி கூட ஆகாமல் போன சவால்கள் எல்லாம் அந்த கட்சிக்கு வந்து இருக்கிறது. அப்படிப்பட்ட சவால்கள் போன்ற ஒரு சவால் திமுகவிற்கு இந்த முறை மீண்டும் வந்துள்ளது.
வெற்றி மேல் வெற்றி: திமுக வரிசையாக கடந்த 10 தேர்தல்களில், அதாவது 2 லோக்சபா தேர்தல், 1 சட்டசபை தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல், நகராட்சி தேர்தல் என்று வென்றுவிட்டது. திமுக வெற்றியின் உச்சத்தில் உள்ளது. கண்டிப்பாக இப்படிப்பட்ட நேரங்களில் ஆட்சி மீது அதிருப்தி இருக்கும்.
மேலே இருப்பவர்களுக்குத்தான் கீழே செல்வதை பற்றிய அச்சம், பயம் இருக்கும். திமுகவிற்கு அப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. அதுவும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் திமுகவிற்கு பெரிய சிக்கலாகி உள்ளது.
1. கள்ளச்சாராய மரணத்தின் எண்ணிக்கைக் கூடுவது திமுக அரசுக்குத் தீரா பழியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது முதன் முறையாக கடும் கோபத்தில் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 66 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அரசுக்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது.
2. எடப்பாடியின் எழுச்சிக்கு இது காரணம் ஆகி உள்ளது. எடப்பாடி ஆக்டிவ் அரசியலுக்கு வந்துள்ளார். போராட்டம், உண்ணாவிரதம் என்று மீண்டும் ஆக்டிவ் ஆகி உள்ளார்.
3. சீமான் - விஜய் - அதிமுக என்ற கூட்டணி நெருக்கம் ஆகி உள்ளது. முதல் விஷயம் ஆளும் திமுகவிற்கு எதிராக அதிகார்பூர்வமற்ற முக்கோண கூட்டணி உருவாகி உள்ளது. அது நாம் தமிழர் - அதிமுக - விஜய் கூட்டணி.
4. இதில் நாம் தமிழர் - அதிமுக - விஜய் மூன்று பேருக்கும் நல்ல வலுவான ஐடி விங் உள்ளது. ஒன்று ரசிகர் மற்ற ஐடி விங். மற்ற இரண்டு அரசியல் ஐடி விங். இதில் விஜய் ஐடி டீம் ஏற்கனவே பல மோசமான சண்டைகளை பார்த்த டீம். எளிதாக டிரெண்டிங் செய்து பழக்கப்பட்ட டீம்.
5. தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக நாம் தமிழரை கூட்டணிக்கு அழைக்கலாம். இதன் மூலம் திமுக கூட்டணிக்கு பதிலடி கொடுக்கலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
6. நடிகர் விஜய் ரகசியமாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கிவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை உடைத்து தங்கள் பக்கம் கொண்டு வருவதே அவரின் திட்டம் என்கிறார்கள். முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுகளில் ஒன்றை குறிவைக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்களை இழுக்க அதிமுக முயன்றது. ஆனால் அதிமுக எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் சேரலாம். அதனால் பாஜக மீதான அதிருப்தி காரணமாக அதிமுகவையும் இந்த கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் விஜய்க்கு அப்படி ஒரு பிம்பம் இல்லை. அவர் பாஜகவுடன் நெருக்கமாக இல்லை. பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு இல்லை. ஆனால் இவர்கள் விஜயுடன் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
7. சீமான் - விஜய் - எடப்பாடி - சொந்த கூட்டணி கட்சிகள் - அதிகாரிகள் என்று திமுகவை சுற்றி பெரிய சுழல் ஏற்பட்டு உள்ளது. அதை திமுக எப்படி சமாளிக்கும் என்பதைதான் பார்க்க வேண்டும்.;
-
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
சார், இது பேட்டரி வைக்கிற இடம்.. நாகர்கோவிலில் எடப்பாடி வேனில் சல்லடை போட்ட பறக்கும் படை அதிகாரிகள்












Click it and Unblock the Notifications