Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவதூறு பேச்சின் ஆதித்தாயே திமுக தான்.. எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி என்னெல்லாம் பேசினீங்க.. சீறிய சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவதூறு பேச்சின் ஆதித் தாயே திமுக தான். எம்ஜிஆர், ஜெயலலிதா, இந்திராகாந்தி பற்றி அவதூறாக பேசியதும் திமுக தான். நல்ல அரசியல் பற்றி பேசுவதற்கு, அடுத்தவங்களுக்கு சொல்லி கொடுப்பதில் திமுகவுக்கு ஒரு துளி கூட அருகதை கிடையாது என்று சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சீமான் கூறியதாவது:- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக ஏன் விலகியது என்று தெரிந்திருக்கும். ஆனால் எங்களால் அப்படி விலக முடியாது. அவதூறாக பேசுவதில் திமுக தான் தாய். இந்திரா காந்தியை பேசியது, ஜெயலலிதாவை பேசியது, எம்ஜிஆரை பேசியது தான் திமுக. நல்ல அரசியல் பற்றி பேசுவதற்கு, அடுத்தவங்களுக்கு சொல்லி கொடுப்பதில் திமுகவுக்கு ஒரு துளி கூட அருகதை கிடையாது. சண்டாளன் என்ற வார்த்தை உண்மையிலேயே ஒரு சமூகத்தை குறிக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது.

seeman Naam Tamilar Party dmk

அடி சண்டாளி என திரைப்பட பாடல் இருக்கிறது. அட சண்டாளா.. என பாஞ்சாலங்குறிச்சியில் வடிவேலு காமெடியில் ஒரு சீன் வந்திருக்கும். அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு தான் எனக்கு அந்த வார்த்தையில் ஒரு சமூக இருக்கிறது என்று தெரியும். ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியானது, அவர் தகுதியினால் வரவில்லை. இவங்க தான் அவரை நீதிபதியாக்கினார்கள் என்று ஆர் எஸ் பாரதி பேசினார். இது நாங்க போட்ட பிச்சை என்று பேசுகிறார்கள். உங்கள் ஆட்சி அதிகாரம் எல்லாம் நாங்க போட்ட பிச்சை என்று நாங்கள் யாரும் சொல்லவில்லையே.

சண்டாளன் என நாங்க எங்கே பாடுனோம். இருக்கிற பாட்டு. அதை எழுதி வெளியிட்டது அதிமுக. அதிமுக வெளியிடும் போது அப்போது எங்கே போய் இருந்தீங்க.. காதில் பஞ்சு வைத்து இருந்தீர்களா?.. கருணாநிதியே பேசியிருக்கிறார். பாசப்பறவை படத்தில் கூட அந்த நீதிமன்ற காட்சியில் சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். இதேபோல் சேது சமுத்திர திட்டத்தை எந்த சண்டாளன் கெடுத்தான் என்றும் கருணாநிதி தான் அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.

சண்டாளன் என்ற வார்த்தையை நானும், சாட்டை துரைமுருகனும் கண்டுபிடித்தது மாதிரி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.. நாமக்கல் கவிஞர் பாடியிருக்கிறார். சங்க இலக்கியம் முழுவதிலும் சண்டாளன் என்ற வார்த்தை இருக்கிறது. கந்த சஷ்டி பாடலிலும் தான் சண்டாளன் என்ற வார்த்தை இருக்கிறது. கந்த சஷ்டி பாடல் எழுதியவர் மீதும் வழக்கு போடவேண்டும். கருணாநிதி மீது வழக்கு போட்டுவிட்டு எங்கள் மீது வழக்கு போடுங்கள்.

மதுரை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கிறது. அந்த வழக்கில் கேரளாவில் மணல் அள்ளுவதற்கும், மலையின் கற்களை மண்ணாக்குவதற்கும் தடை இருப்பதால் தமிழ்நாட்டில் இருந்து மலையை கற்களாக்கி, மணலாக்கி அள்ளுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார்கள். இதற்கு தமிழ்நாடு அரசும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

நீதிபதியும் ஒரு நாளைக்கு 700 லாரிகளில் எடுத்து செல்லலாம் என்று கூறியிருக்கிறார். அந்த நீதிபதி ஏன் அங்கு தடை விதித்து இருக்கிறீர்கள் என்று கேட்க வேண்டுமா இல்லையா?.. என் மலை எனக்கு.. என் மணல் எங்களுக்கு.. என் மண்ணின் வளத்தை பாதுகாக்கிறவர்கள் தானே எனக்கு தகப்பனாக இருக்க முடியும். மற்ற மாநிலங்களில் பெற்றவர்களே அப்பாவாக இருக்கிறாங்க.. இங்க மற்றவர்கள் அப்பனாக இருப்பதனால் தானே இப்படி சிக்கல். ஏன் இதை பற்றி கவலைப்படாம இருக்கிறாங்க.. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக திமுக ஐடி விங் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். இதனை கண்டித்து சீமான், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் பேசியிருந்தனர். இதனை தொடர்ந்து தான் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை காவலில் அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+