Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டியது அன்புமணியா? “உளறல் சீமான்”.. வறுத்தெடுக்கும் திமுக ஐடி விங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியது அன்புமணி ராமதாஸ் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதை திமுக ஐ.டி விங் கடுமையாக விமர்சித்துள்ளது. கூட இருக்கும் பலர் கட்சியை விட்டு விலகி செல்வதால் ஏற்படும் உளறல் பாதிப்பிற்கு நல்ல வைத்தியசாலையை அணுகலாம் என கிண்டல் செய்துள்ளனர்.

மதுரையில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை நீண்ட கால தாமதம் காரணமாக இந்தத் திட்டம் கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

seeman madurai madurai aiims

கடந்த 2019 ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி மதுரை வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை நட்டு வைத்தார்.

ஆனால் அதன் பின்னர் இன்று வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்து வருகிறடு. மதுரை எய்ம்ஸ் உடன் அறிவிக்கப்பட்ட பிற எய்ம்ஸ் மருத்துவமனைகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு விட்டாலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கே இன்னும் விடை தெரியாத நிலைதான் உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் திமுக முன்னர் ஆட்சி செய்த காலத்திலேயே தொடங்கப்பட்டது. அப்போது மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில் அன்றைய மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தான் எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அப்போது உடன் இருந்தது காங்கிரஸும் திமுகவும். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கட்டாமல் இருந்தது ஏன்? இப்போது 40 எம்.பிக்களை வைத்திருந்தும் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட குரல் கொடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

சீமான் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், திமுக ஐ.டி விங், சீமானின் இந்தப் பேச்சை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. திமுகவினர் பலரும் இந்தப் பதிவை பகிர்ந்து சீமானை விமர்சித்து வருகின்றனர்.

seeman madurai madurai aiims

திமுக ஐ.டி விங் வெளியிட்டுள்ள பதிவில், "மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டியது யார் என்று கூட தெரியாமல் தற்குறித்தனமாக உளறாமல் இருந்தாலாவது, கட்சியில் இருக்கும் ஒன்று இரண்டு பேரையாவது காப்பாற்றிக் கொள்ளலாம். கூட இருக்கும் பலர் கட்சியை விட்டு விலகி செல்வதால் ஏற்படும் உளறல் பாதிப்பிற்கு நல்ல வைத்தியசாலயை அணுகலாம்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வர அடிக்கல் நாட்டியது நான் தான். மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கி 2008ல் அடிக்கல் நாட்டியதும் நானே. ஆனால், பின் வந்த அதிமுக அரசு அதை செயல்படுத்தவில்லை." என்று முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+