எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை! சைக்கிள் ஓட்டிய ஆனந்தை கிண்டலடித்த திமுக ஐடி விங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக சார்பில் "போதை இல்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தாராபுரத்தில் தொடங்கி வைத்து அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், பர்வேஸ் உள்ளிட்டோர் ஓட்டியது குறித்து திமுக ஐடி விங் கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளது.

தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் வகையிலும், இளைஞர்கள், மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் நோக்கிலும் தவெக சார்பில் போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தாராபுரத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

Bussy Anand

இந்த விழாவில் தவெக அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், பர்வேஸ், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கொடியசைத்து சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டினர்.

தாராபுரத்தில் தொடங்கியுள்ள இந்த விழிப்புணர்வு பேரணி பல்வேறு முக்கிய பகுதிகள் வழியாக செல்கிறது. அப்போது போதை பொருளினால் ஏற்படும் தீமைகள், சமூகப் பாதிப்புகள், குற்றச் செயலுக்கு வழிவகுப்பது, உடல்நல பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.

வழிநெடுகிலும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்வு குறித்து அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாக்கவும் போதையில்லா தமிழகத்தை உருவாக்கவும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்களிடையே ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தவெக சார்பில் தாராபுரத்தில் சைக்கிள் பேரணி நடந்தது.

இந்தியாவின் மிகப் பெரிய பெருமையே அதன் ஜனநாயகம்தான். அந்த ஜனநாயகத்தின் மாண்பைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

கடந்த தேர்தலில் தாராபரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் இந்த தொகுதி மக்களிடேயே அரசியல் மற்றும் ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாற்றுத்துக்கான இந்த புரட்சியில் அவர்களையும் பங்கெடுக்கச் செய்யவும் இந்த சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணி வெறும் தேர்தலுக்காகவோ அல்லது வெற்றிக்காகவோ அல்ல. மக்களிடையே ஜனநாயக பண்புகளையும் விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்துவதே இந்த சைக்கிள் பேரணியின் முதன்மை நோக்கமாகும் என அருண்ராஜ் தெரிவித்தார்.

இந்த சைக்கிள் பேரணியில் கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா, அமைச்சர் ஆனந்திடம் ஏதோ பேசுவது போல் கிட்ட நெருங்கிய போது ஆனந்த் முன்னால் நகர்ந்துவிட்டார். கம்பம் எம்எல்ஏ சைக்கிளில் இருந்து தலைக்குப்புற விழுந்துவிட்டார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை தூக்கிவிட்டு ஆசுவாசப்படுத்தினர். அவர் விழுந்த சப்தம் கேட்டு ஆனந்த் திரும்பி பார்த்தும் சைக்கிளை நிறுத்தாமல் அவர் பாட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த சைக்கிள் பேரணியை திமுக ஐடி விங் கிண்டல் செய்துள்ளது. அவர்களின் ட்வீட்டில் வடிவேலின் காமெடி காட்சியில் இடம்பெற்ற வசனமான " எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை என்று ரீல்ஸ் எடுக்கும் போது, ஒரு எம்.எல்.ஏ கீழே விழுகிறார்; ஆனால், அதைக் கூடக் கண்டு கொள்ளாமல் செல்கிறார்கள்.

​நல்ல அமைச்சர்கள், நல்ல எம்.எல்.ஏ-க்கள் அது சரி, 41 உயிர்கள் பறிபோகும் போதே பாட்டுப் பாடி வசனம் பேசிய கூட்டம் தானே!" என்பதை இணைந்து கிண்டல் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+