Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெருமதிப்பிற்குரிய பேராசிரியர்.. திமுகவினரின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.. சீமான் இரங்கல்

அன்பழகன் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தி.மு.க பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்... அக்கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவரது துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என்று சீமான் இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பேராசிரியர் க. அன்பழகன் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்

    உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24-ம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் க. அன்பழகன் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

    DMK k anbazhagan passes away: Seeman Condolence to Anbazhagan died

    சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள அவருடைய வீட்டில் அவர் உடலுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள், திரையுலகத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல பலரும் தங்கள் இரங்கல் பதிவினை ட்விட்டர் வாயிலாகவும், அறிக்கை மூலமாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்.... "இதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலான பொறுப்புகளில் பணியாற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

    அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்" இவ்வாறு சீமான் கூறியுள்ளார். தன்னுடைய ட்விட்டரில் மட்டுமல்லாது, நாம் தமிழரின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் இந்த இரங்கல் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

    பொதுவாக, திராவிடர் கழகத்தினர் மீது கடுமையான கோபத்திலும், அதிருப்தியிலும் இருப்பவர் சீமான்.. அவரது ஒவ்வொரு மேடை பேச்சிலும் அதிமுகவைவிட திமுக மீது தான் ஏராளமான விமர்சனத்தை எடுத்து வைப்பார்.. ஆனால் ஒரு மூத்த தலைவர் மறைவு என்றதும் அத்துனை காழ்ப்புணர்ச்சியும் மறைந்து.. உரிய அஞ்சலியை சீமான் வெளிப்படுத்தி உள்ளது அரசியல் நாகரிகம் தழைத்தோங்குவதையே காட்டுகிறது!!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+