அடிச்சு தூக்கும் திமுக.. சறுக்கி விழும் அமைச்சர்கள்.. சரமாரி பின்னடைவு.. திகைப்பில் அதிமுக!
அதிமுக அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள்
சென்னை: அதிமுக அமைச்சர்கள் பெரும்பாலும் தோல்வி முகத்தை சந்தித்துள்ளனர்.. காலையில் தபால் ஓட்டுக்கள் எண்ண தொடங்கும்போதே, பல முக்கிய அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அதில் 12 அமைச்சர்கள் சறுக்கலை சந்தித்துள்ளனர்.
இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓட்டு எண்ணிக்கை ஆரம்பமானது.. தேர்தலுக்கு முன்பும்சரி, தேர்தல் அன்றும் சரி, தேர்தலுக்கு பின்பும் சரி, வெளியான கருத்துக்கணிப்புகள் எல்லாமே திமுகவுக்கு சாதகமாகவே இருந்தன.
அதேபோல அரசியல் நோக்கர்களும், தேர்தல் வல்லுநகர்களும் திமுகவே மெஜாரிட்டியை பிடிக்கும் என்றார்கள்.. ஆனால், இவ்வளவு பேரும் புட்டு புட்டு வைத்த நிலைமையில், அதிமுக தலைமை மட்டும், வேறு விதமாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதிசயம்
யாரும் எந்த கணிப்பையும் நம்பாதீங்க, அதிமுகவே மீண்டும் ஆட்சியமைக்க போகிறது என்று அறிக்கை வெளியானது.. 2016 -ல் நடந்தது போலவே புது அதிசயம் நடக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னார்.. ஆனால், இன்று காலை நிலவரம் என்னவென்றால், தபால் ஓட்டுக்களிலேயே திமுக முந்தி கொண்டு வருகிறது. ஏராளமான அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள்.

அமைச்சர்கள்
இது சற்று அதிர்ச்சியான விஷயம்தான்.. காரணம், அமைச்சர்களை பொறுத்தவரை எப்படியாவது வெற்றி பெற்றுவிடுவார்கள் என்பதுதான் கடந்த கால அரசியல் நமக்கு காட்டிய உண்மை.. அந்த வகையில்தான் இப்போதும் நம்பப்பட்டது... அதிலும் சீனியர்கள் அமைச்சர்களின் ஓட்டுக்களில் பின்தங்கி இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

செல்வாக்கு
அதிமுக ஆட்சியில் தொடர்ந்து அமைச்சர்களாக இருந்தவர்களே, இப்போதும் இருக்கின்றனர்.. கட்சி செல்வாக்கையும், சொந்த சமுதாய செல்வாக்கையும் அபரிமிதமாக பெற்றிருப்பதால், திமுகவுக்கு தங்கள் தொகுதிகளில் டஃப் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இதுபோக தொகுதிகளில் சில விஷயங்களில் தாராளத்தையும் அள்ளி தெறித்துள்ளதாகவும் கூறப்பட்டது. அப்படி இருந்தும் ஒன்றும் பெரிதாக ரிசல்ட் இதுவரை வரவில்லை.

சிவி சண்முகம்
விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு, முன்னிலையில் திமுக உள்ளது.. மதுரவாயலில் அமைச்சர் பெஞ்சமினும் பின் தங்கி உள்ளார்.. மாஃபா பாண்டியராஜனும் பின் தங்கி உள்ளார்.. அவ்வளவு பேச்சு பேசிய ஜெயக்குமாருக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியும் பின்தங்கி உள்ளார். இந்த தொகுதிகளில் எல்லாம் ஆளும் தரப்பு மீதான அதிருப்தியும், பாஜக மீதான கோபமும்தான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்று தெரிகிறது.. அதுமட்டுமல்ல, திமுக மீதான நம்பகத்தன்மையை இது வெளிப்படுத்தி வருகிறது..

12 பேர்
மொத்தம் 12 அமைச்சர்களுக்கு தோல்வி முகம் ஏற்பட்டுள்ளது.. ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கே மீண்டும் சீட் கொடுக்கப்பட்டது.. அந்த வகையில் 23 அமைச்சர்களுக்கு இந்த முறை வாய்ப்பு தரப்பட்டது.. அதில் 12 பேர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இது அதிமுகவுக்கே பெருத்த அடிதான்.. அமைச்சர்களுக்கே இந்த நிலைமையா என்று தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. இனி அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.. !
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications