"செம".. இதுதான் மு.க.ஸ்டாலின்.. ரஜினிக்கு பேஸ்புக்கிலும், போனிலும்.. நச்சென்று ஒரு வாழ்த்து!
ரஜினிக்கு முக ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்
சென்னை: "அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு.." என்று ஆரம்பித்து ரஜினிகாந்த்துக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் பதிவிட்ட பிறந்த நாள் வாழ்த்து மிக முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.
இன்று நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள், விஐபிக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், முக ஸ்டாலினும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், "அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள், நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்! நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின்
சென்ற வருடமும், இதேபோல ரஜினிக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தாலும், இந்த முறை அரசியல் களத்தில் ரஜினி இறங்க உள்ளதாலும், விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதாலும், திமுக தலைவரின் இந்த வாழ்த்து மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.

லீலா பேலஸ்
இதற்கு காரணம், எப்போதும் இல்லாமல் இந்த வருடம், திமுகவுக்கு நேர் எதிரியாக ரஜினியை உருவகப்படுத்தி வருவதுதான்.. இது ரஜினியே ஆரம்பித்து வைத்த ஒன்றுதான்.. அன்று லீலா பேலஸில் பேசும்போது, ஸ்டாலினுக்கு இது வாழ்வா, சாவா தேர்தல் என்று சொன்னபோதே, ரஜினி ரசிகர்களின் குறி, திமுக பக்கம் சென்றது.. அப்போதுமுதல், எப்போது ரஜினி குறித்த அறிவிப்பு வந்தாலும், அது சம்பந்தமான போஸ்டரை அறிவாலயம் முன்பு கொண்டு போய் ஒட்டுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

திமுக
அதுமட்டுமல்ல, ரஜினி மன்றத்தில் இருந்து யாராவது அதிருப்தி காரணமாக விலகினால், அவர்கள் நேராக போய் திமுகவில் சேர்ந்து விடுவதும் நடந்து வருகிறது. மேலும், ரஜினியின் வருகையானது, திமுகவின் ஓட்டுக்களை பிரிக்கும் சக்தியாக பாஜக உள்ளிட்ட கட்சிகளால் நம்பப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் ஸ்டாலின் vs ரஜினி என்ற பிம்பம் ஏற்பட்டுள்ளது.

நட்பு
ஆனால், யதார்த்த உண்மை அப்படி இல்லை.. ரஜினிகாந்த், ஸ்டாலின் இடையே நல்ல நட்பு பல வருஷமாக இருக்கிறது.. கட்சி தொடங்க போவதாக 2017-ல் ரஜினி அறிவித்தாலும்கூட, இவர்களின் நட்பில் எந்த விரிசலும் இதுவரை இல்லை.. நல்லவிதமான புரிதலும் உள்ளதாகவே கருதப்படுகிறது..ஒரு சில கட்டுரைகள் முரசொலியில் ரஜினிக்கு எதிராக வெளியிடப்பட்டாலும், இனி அப்படிப்பட்ட கட்டுரைகள் வெளியிடுவதில் கவனமாக இருக்கும்படி முரசொலிக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

நேசம்
எனவே, தமிழக அரசியலில் ரஜினியும், ஸ்டாலினும் எதிர் எதிர் திசையில் இருப்பது போல தென்பட்டாலும், இந்த இரு ஜாம்பவான்களுமே புரிதலுன்கூடிய நேசத்தை ஒருவர் மீது ஒருவர் தவழ விட்டு வருகின்றனர் என்பதே நிஜம்.. அந்த வகையில்தான் இன்றைய ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்தும் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது!
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications