திமுக லீகல் விங் முடிச்சு விட்டுடும்.. அரசியல் சாணக்யரிடம் 3 மணி நேரம்.. பதற்றத்தோடு ஆலோசித்த விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளும் திமுக தரப்பு கரூர் வழக்கில் தீவிரமாக இருப்பதால்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதற்றத்தோடு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் சாணக்கியர் ஒருவரை விஜய் நேரில் சந்தித்து ரகசியமாக பேச நேற்று ஆலோசனை செய்துள்ளார். பல்வேறு முக்கியமான விஷயங்களை விஜய் அவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.

TVK Vijay

தமிழக வெற்றிக் கழக தலைவர்

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு பின் சதி வேலை நடந்திருப்பதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய தசரா விடுமுறைக் கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் எஸ். அறிவழகன், செப்டம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை நீதிபதி தண்டபாணி இல்லத்தில் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணாமலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது வழக்கறிஞர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த துயர சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த நீதிபதி தண்டபாணி, இது ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, நீதிபதி தண்டபாணி, நீதிபதி ஜோதிராமனுடன் கலந்துரையாடி, முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டு, எண் அளிக்கப்பட்டால், செப்டம்பர் 29, 2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் நேற்று வழக்கு விசாரணை நடக்கவில்லை. இதையடுத்து இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கு விசாரணை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

விஜய் ஆலோசனை

ஆளும் திமுக தரப்பு கரூர் வழக்கில் தீவிரமாக இருப்பதால்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதற்றத்தோடு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் இந்த வழக்கு விஜய்க்கு எதிராக திரும்பவே வாய்ப்புகள் அதிகம்.

ஏனென்றால் விஜய் தாமதமாக வந்தது, மற்ற மாவட்டங்களில் இருந்து கூட்டத்தை அழைத்து வந்தது, கூட்டத்தில் இங்கும் அங்கும் தாவியது, ஆம்புலன்ஸ் வந்த போது கூட விடாமல் பேசியது, ஜெனரேட்டர் அறையை உடைத்த தொண்டர்களை கண்டிக்காமல் போனது, மீட்பு பணிகளுக்கு கூட உதவாமல் போனது என்று விஜய் மீது நிறைய தவறுகள் உள்ளன. அவருக்கு எதிராக ஆதாரங்களும் உள்ளன.

இதையடுத்தே விஜய் அரசியல் சாணக்கியரிடம் தீவிரமாக ஆலோசனை செய்து இருக்கிறாராம். 3 மணி நேரம் நடந்த ஆலோசனையில், வழக்கு என்று வந்தால் திமுகவை தடுக்க முடியாது. திமுக ஐடி விங் தவெக கதையை முடித்துவிடும். அவர்களை என்னால் எதிர்க்க முடியாது. நீங்கள்தான் உதவ வேண்டும். டெல்லி உதவியை நீங்கள்தான் பெற்று தர வேண்டும்.

அதை எதிர்கொள்ள ஆலோசனை தேவை. அதோடு சில சட்ட ரீதியிலான சப்போர்ட் தேவை. அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும் என்று அந்த அரசியல் சாணக்கிய ஆலோசகரிடம் விஜய் கேட்டு உள்ளாராம். விஜய் அதோடு.. நிலைமை கைமீறி சென்றுவிட்டது. பல விஷயங்கள் நினைத்தது மாதிரி இல்லை. பல உயிர்கள் போய்விட்டது. இதற்கு நீங்கள்தான் அரசியல் ரீதியாக உதவி செய்ய வேண்டும் என்று அந்த நபரிடம் விஜய் கேட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+