ஸ்டாலின் பேச வேண்டும்.. எப்படியாவது ஃபோகஸை திருப்ப.. தீவிரமாக முயன்ற விஜய்.. கண்டுக்காத திமுக!
சென்னை: தமிழ்நாடு வெற்றி கழக நிறுவனரும், நடிகருமான விஜய்யின் விமர்சனங்களுக்கு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இதுவரை பதில் அளிக்கவில்லை. ஸ்டாலினை எப்படியாவது பேச வைக்க வேண்டும்.. ஸ்டாலின் தனக்கு பதில் அளிக்க வேண்டும் என்று விஜய் தீவிரமாக அட்டாக் மோடில் பேசி வருகிறார். ஆனால் இதுவரை ஸ்டாலின் விஜய் பெயரை கூட கூறவில்லை.
விஜய் தனது மாநிலம் தழுவிய அரசியல் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரடியாக தாக்கி பேசி உள்ளார். முதல்வர் ஸ்டாலினை எப்படியாவது விவாதத்திற்குள் இழுக்க வேண்டும் என்று விஜய் தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார்.

விஜய் - தமிழக வெற்றிக் கழகம்
முதல்வர் ஸ்டாலினின் பயணங்கள் "மாநிலத்திற்கு முதலீடு கொண்டுவரவா அல்லது வெளிநாட்டில் தனிப்பட்ட முதலீடுகளைப் பாதுகாப்பதற்காவா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமூகத்திற்கான பிரச்சினைகள் தொடர்பாக பாஜக மற்றும் திமுகவை விமர்சித்த விஜய், பாஜக "பிரித்தாளும் அரசியல்" செய்வதாகக் கூறினார்.
மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களை இந்தியர்கள் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டும் தமிழ்நாட்டு மீனவர்கள் என்றும் தனித்துக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மீனவர் பிரச்சினைகள் குறித்து ஸ்டாலின் கடிதங்கள் மட்டுமே எழுதுகிறார் என்றும், உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
விஜய் - ஸ்டாலின் அட்டாக்
விஜய் பேசுகையில், திருவாரூர் என்றதும் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் தான் உடனடியாக ஞாபகத்திற்கு வரும். திருவாரூர் தேர்னா சும்மாவாங்க... இந்த மண்ணோட அடையாளம் ஆச்சே..
திருவாரூரில் ஓடாமல் இருந்த தேரினை ஓட வைத்தது நாங்கள் என்று மார்தட்டி கொள்வார்கள்.. ஆனால் இன்று அவரின் மகன் தமிழ்நாடு என்கிற தேரினை ஓடவிடாமல் நான்கு திசைகளிலும் முட்டுக் கட்டை போடுகிறார்.. திருவாரூர் மாவட்டம் தான் அவங்களுடைய சொந்த மாவட்டம் என பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு திருவாரூர் கருவாடாக காய்கிறது. அதனை கண்டுகொள்ளவில்லை.
தந்தை பெயரில் பேனா சிலை வைக்கிறீர்கள்.. உங்கள் தந்தையின் பெயரை பல்வேறு திட்டங்களுக்கும் வைக்கிறீர்கள்.. ஆனால் சொந்த மாவட்டத்தில் அடிப்படை சாலை வசதி கூட சரியாக இல்லை.. நாகை மாவட்டத்தை போலவே திருவாரூர் மாவட்டத்திலும் அதிகளவிலான குடிசைகள் இருக்கின்றன.
தவெக ஆட்சியில் அடிப்படை வசதிகளில் எந்த சமரசமும் இருக்காது. குடும்ப ஆட்சி இல்லாத, ஊழல் இல்லாத தமிழ்நாடு என்பதே இலக்கு.. எங்கு பார்த்தாலும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என்கிறார்கள்.. அப்படியா என்று அங்கிருந்தவர்களிடம் விஜய் கேட்க, அதற்கு தொண்டர்கள் இல்லை.. இல்லை.. இல்லை என்று பதில் அளித்தனர்.
விஜய் ஸ்டாலின் விமர்சனம்
ஆனால் விஜயின் விமர்சனங்களுக்கு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இதுவரை பதில் அளிக்கவில்லை. ஸ்டாலினை எப்படியாவது பேச வைக்க வேண்டும்.. ஸ்டாலின் தனக்கு பதில் அளிக்க வேண்டும் என்று விஜய் தீவிரமாக அட்டாக் மோடில் பேசி வருகிறார். ஆனால் இதுவரை ஸ்டாலின் விஜய் பெயரை கூட கூறவில்லை.
தி.மு.க.வின் முப்பெரும் விழா கரூரில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் தனது உரையில் கடுமையாக விமர்சித்தார். ஆனால் விஜயை பற்றி ஸ்டாலின் பேசவே இல்லை.
கொள்கைகள் என்றால் என்னவென்று அறியாத எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அடமானம் வைத்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தி.மு.க. ஆட்சியின் கடந்த நான்காண்டுகால சாதனைகளையும், நலத்திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.
தி.மு.க.வின் முப்பெரும் விழா
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்காக தி.மு.க. தொண்டர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய ஆதரவு தராவிட்டாலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாத எடப்பாடி பழனிசாமி, தற்போது மக்களின் குரலாக ஒலிக்க திராணியற்று பா.ஜ.க.விற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார். இப்போதும் பா.ஜ.க. தன்னுடன் இருப்பதாக அவர் வாய்க் கொழுப்போடு பேசி வருகிறார்" என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
ஸ்டாலின் எடப்பாடி அட்டாக்
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற கண்ணியத்தைக் கூட எடப்பாடி பழனிசாமி கடைபிடிக்காமல் தன்னைப் பற்றி ஒருமையில் பேசுவதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார். "கொள்கை இல்லாத அவரது தரம் தாழ்ந்த பேச்சுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை" என்றும் அவர் கூறினார்.
திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி என்பது வெட்கக்கேடானது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். அ.தி.மு.க. அண்ணா வழி வந்த கட்சி என்றார்கள், ஆனால் அதை அடிமையிசம் என்று மாற்றி, அமித் ஷாவிடம் சரணடைந்துவிட்டார் என்றும் சாடினார். இந்த கூட்டத்தில் ஒருமுறை கூட விஜய் பற்றிய ஸ்டாலின். இந்த கூட்டம் முழுக்க விஜயை ஒரு பொருட்டாக மதித்தது போல கூட ஸ்டாலின் காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதிமுகதான் ஒரே எதிரி.. மற்ற கட்சிகளுக்கு எல்லாம் அந்த தகுதி இல்லை என்று ஸ்டாலின் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
சமீபத்தில் விஜயின் அங்கிள் பேச்சு வெளியாகி சர்ச்சையானது. இதை ஸ்டாலினும் கவனித்து இருக்கிறார். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. விஜய் என்னவேண்டுமானாலும் பேசட்டும், அவரை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று ஸ்டாலின் புறந்தள்ளிவிட்டார் என்று கூறப்படுகிறது.
விஜய் பேசியதை பற்றி பெரிதாக அவர் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. விஜய், முதல்வர் ஸ்டாலினை கடுமையாகக் கேலி செய்த போதிலும், ஸ்டாலின் இதுவரை விஜய் குறித்துப் பேசியதில்லை. விஜயை ஒரு பொருட்டாக கூட ஸ்டாலின் பார்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே விஜயின் பேச்சு, எப்படியாவது ஸ்டாலினை பேச வைக்க வேண்டும் அல்லது விமர்சனத்தைப் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் அமைந்திருந்தது.
"அங்கிள்" என்று சொன்னால் ஸ்டாலின் கோபப்பட்டு விமர்சிப்பாரா, அல்லது தனக்கு பதிலடி கொடுத்து தன்னை முக்கியத்துவம் வாய்ந்தவராகப் பார்க்க வைப்பாரா என்ற நோக்கத்துடன் விஜய் பேசியதாகத் தோன்றியது. ஆனால், விஜய் கருத்துக்கு பதிலடி தர வேண்டாம் என திமுக மேலிடம் கட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications