சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5-ம், டீசல் விலை ரூ 4-ம் குறைப்பு.. வாகன ஓட்டிகளை குளிர்வித்த திமுக

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல் டீசல் குறைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளின் வயிற்றில் பால் வார்த்து போல் உள்ளது.

தேர்தல் என்றாலே வேட்பாளர்கள், தொகுதிகள் ஆகியவற்றை காட்டிலும் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன். அந்த வகையில் வேட்பாளர்கள், தொகுதிகள் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட போதிலும் தேர்தல் அறிக்கை எதிர்பார்க்கப்பட்டது.

DMK Manifesto For 2021 Tamil Nadu Assembly Elections released today by MK Stalin

அந்த வகையில் இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் இந்த அறிக்கை வெளியானது. அதில் ஸ்டாலின் கூறுகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 குறைக்கப்படும்.

அது போல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ 4 குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். அண்மைக்காலமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என திமுக அதிரடியாக அறிவித்துள்ளது வாகன ஓட்டிகளின் வயிற்றில் பால் வார்க்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

English summary
DMK Manifesto For 2021 Tamil Nadu Assembly Elections: MK Stalin announces Petrol and Diesel prices will be reduced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X