அனைத்து வகை விவசாய கடன்களும் தள்ளுபடி.. திமுக தேர்தல் வாக்குறுதியில் அசத்தல் திருத்தம்
Recommended Video

சென்னை: அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையை திருத்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி, திமுக நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், சிறு, குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர்க் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

5 ஏக்கருக்கும், கீழே நிலம் வைத்திருப்பவர்களே, சிறு, குறு விவசாயிகள் பட்டியலில் வருவார்கள். எனவே அவர்கள் மட்டுமே பலன் பெறுவார்கள். ஆனால் அனைத்து விவசாயிகளுக்குமான கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக கூட்டணி கட்சிகளால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையை இன்று திருத்தி வெளியிட்டுள்ளது திமுக.
[இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்]
இதேபோல்தான், 2007ம் ஆண்டு ரூ.70 ஆயிரம் கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில், நாடு முழுக்க தேசிய வங்கிகளில், ரூ.80 ஆயிரம் கோடி பயிர்க்கடன்கள் நிலுவையில் உள்ளன. அவை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications