சுரண்டிவிட்ட ஆளுநர்.. செயலில் காட்டிய உதயநிதி! இனி திமுக கூட்டங்கள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பற்ற வைத்த நெருப்பு பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இனி திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் தொடங்கும் என தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையின் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுவதும் வாசிக்காமல் புறக்கணித்தார். உரையில் அரசின் சாதனைகள் குறித்து இடம்பெற்ற அறிவிப்புகள் எதையுமே ஆளுநர் வாசிக்காமல் உரையை நிறுத்தினார். இதன் காரணமாக சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் முழு உரையையும் வாசித்தார். கூட்டத்தின் இறுதியில் தேசிய கீதம் ஒலிக்கப்படும் நிலையில் அதற்கு முன்னரே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார்.

ஆளுநர் சர்ச்சை: ஆளுநரின் செயலுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. அதில் பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்றும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், முடிவிலும் அதை இசைத்திட வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை தமிழக அரசு புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொதுவாக தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் தொடங்கி பள்ளி நிகழ்ச்சிகள் வரை அனைத்திலும் நிகழ்ச்சி தொடங்கும்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதேபோல் நிகழ்ச்சி முடியும்போது தேசிய கீதம் பாடப்படும். தமிழ்நாடு சட்டசபையிலும் இதுவே மரபாக இருக்கிறது. சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும் போது தேசிய கீதம் இசைக்கப்படுவது தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு. இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி இந்த விதியை மாற்றும்படி கோரிக்கை வைத்து, அதனை தமிழக அரசு நிராகரித்துள்ளது.
உதயநிதி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில்: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் நடந்தேறி இருக்கின்றன. கடந்த ஆண்டு, கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, சரஸ்வதி பாடல் பாடப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது இதையொட்டி பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன.
இந்நிலையில் தான் இன்று ராமநாதபுரத்தில் நடந்த 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' எனும் பொதுக்கூட்டம் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயாளருமான உதயநிதி ஸ்டாலின், இனி எல்லா திமுக நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் எனத் தெரிவித்தார்.

இனி திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் தொடங்கும்: உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்று பேரறிஞர் அண்ணா அன்றே கூறினார். ஆளுநர் சமீபத்தில் தேசிய கீதம் தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பினார். அதனால் இன்று இந்தக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும்.
இனி அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் தொடங்கும். தேசிய கீதம் நமக்கு முக்கியம். அது போல தமிழ்தாய் வாழ்த்தும் நமக்கு முக்கியம். எழுதிக் கொடுப்பதை படிக்க வேண்டியதுதான் ஆளுநருடைய பொறுப்பு. அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி கிடையாது.
குடியரசுத் தலைவர் கூட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட்டவர். கடந்த ஆண்டு இதே ஆளுநர் என்ன செய்தார்? நாம் எழுதிக் கொடுத்த உரையில் இருந்த பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை தவிர்த்து விட்டார். அதன் பிறகு தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என்றார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு இரண்டே நாளில் பல்டி அடித்து மன்னிப்புக் கோரினார்." என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்.
ஆளுநர் - திமுக அரசு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. திராவிடம் பற்றி விமர்சித்து ஆளுநர் பேசினால், திமுக தரப்பு திராவிடத்தை முன்னிலைப்படுத்தி பேசி வருகிறது. ஆளுநர் ரவியால் தமிழ்த்தாய் வாழ்த்து - தேசிய கீதம் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது, திமுக கூட்டங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என அறிவித்துள்ளார் உதயநிதி.
கொள்கை எதிரிகளுக்கான பதிலடி: ராமநாதபுரத்தில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், "நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, "உரிமைகளை மீட்கத் தலைவரின் குரல் - பாசிசம் வீழட்டும் - இந்தியா வெல்லட்டும்" எனும் தலைப்பில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான மாபெரும் பரப்புரைக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம். தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஏற்காத கொள்கை எதிரிகளுக்கான பதிலடியாக, தமிழ்நாட்டை மட்டுமல்லாது இந்தியாவையும் காப்பாற்றுவதற்கான இக்கூட்டத்தை, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கினோம்.
மொழி உரிமை - நிதி உரிமை - கல்வி உரிமை என ஒவ்வொரு உரிமையாகப் பறித்து வரும் பாசிஸ்ட்டுகளையும், உரிமைகளை தாரைவார்த்த அடிமைகளையும் வீழ்த்துவதற்கான ஜனநாயக வாய்ப்பே இந்த மக்களவைத் தேர்தல் என்று உரையாற்றினோம். வலிமையான மாநிலங்கள் வேண்டும் என்னும் நம்முடைய லட்சிய வேட்கையோடு, மாநிலங்களை இல்லாமல் செய்யத்துடிக்கும் பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவதற்கான உறுதியை மத நல்லிணக்கத்துக்கு பெயர் போன இராமநாதபுரத்தில் ஏற்றோம். பாசிசம் வீழட்டும் - இந்தியா வெல்லட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை












Click it and Unblock the Notifications