விஷயமே இதுதான்.. திமுக போட்ட கணக்கு.. லாஸ்ட் சான்ஸையும் ராஜகண்ணப்பன் விட்டுவிடுவாரா?
செய்தியாளரிடம் கண்ணப்பன் கோபமாக நடந்து கொண்டாராம்
சென்னை: இலாகா மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்னொரு சர்ச்சைக்கு ஆளாகி உள்ளார் அமைச்சர் ராஜ கண்ணப்பன்..!
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், தன்னை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சாதியை சொல்லி திட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவும் வைரலானது... இந்த வீடியோவை முன்னிறுத்தி, ராஜகண்ணப்பனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் வெடித்தன.

வீடியோ
சர்ச்சை வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக திடீரென மாற்றப்பட்டார்... அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இலாகா ஒதுக்கப்பட்டது... பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கரிடம் போக்குவரத்துத் துறையும் உடனடியாக ஒதுக்கப்பட்டது...

போக்குவரத்து துறை
ராஜ கண்ணப்பனின் இலாகா தற்போதுதான் மாறியதாக இருந்தாலும், அதற்கான சாதிய சர்ச்சை பிரதான காரணமாக இருந்தாலும், இலாகா மாற்றம் என்பது எப்போதோ எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.. போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் ராஜகண்ணப்பன் மீது இன்னமும் உள்ளன.. ராஜகண்ணப்பன் மீது கட்சி ரீதியாகவும் சரி, துறை ரீதியாகவும் சரி, தொடர் குற்றச்சாட்டுகள் நித்தமும் எழுந்து கொண்டே இருந்தது.

பறிமுதல்
எல்லாவற்றிற்கும் மேலாக, பொதுவேநிலைநிறுத்தத்தின் போது, திமுகவின் தொமுச தொழிற்சங்கம் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதும், சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூபாய் 35 லட்சம் வரை பறிமுதல் செய்ததும் ராஜகண்ணப்பனுக்கு உச்சக்கட்ட எதிர்ப்பை வலுவாக பெற்று தந்துவிட்டது.. இதுபோன்ற விவகாரங்களுக்கு எப்படியும் அவர் மீது துறைவாரியான நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், அரசு அதிகாரி ஒருவரை சாதி ரீதியாக திட்டிய விவகாரத்தில் அதிரடியை திமுக மேலிடம் காட்ட வேண்டி இருந்தது.

கண்ணப்பன்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக தற்போது மாற்றப்பட்டுள்ளார்.. போக்குவரத்து துறையை விட குறைவான பதவி இது என்றே சொல்லலாம்.. இலாகா மாற்றம் என்ற செய்தி வந்த அன்றே, மறுபடியும் ஒரு சர்ச்சை கண்ணப்பன் மீது எழுந்துள்ளது.. அதாவது, டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் சில்பா என்பவர், ராஜ கண்ணப்பனிடம் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். லஞ்சம், முறைகேடு புகார்களுக்கு உள்ளான, போக்குவரத்து ஆணையர் நடராஜனுக்கு, பணியிட மாற்றம் செய்யப்பட்டது சரியா நடவடிக்கையா? என்று கேட்டிருக்கிறார்.

கண்ணப்பன் டென்ஷன்
ஆனால், கண்ணப்பன் அவரது கேள்விக்கு பதில் சொல்லவில்லையாம்.. கேள்வி கேட்டதும் பொறுமையிழந்து டென்ஷன் ஆகிவிட்டாராம்.. அந்த பெண் ரிப்போர்ட்டரின் கேமராவை கோபமாக தாக்கி உள்ளதாக தெரிகிறது.. அமைச்சரின் இந்த நாகரிகமற்ற செயல்பாடு பொதுவெளியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஷில்பா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.. இந்த பதிவுதான் வைரலாகி வருகிறது !

ஆதரவாளர்கள்
இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு, ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.. ஆனால், அமைச்சர் பொறுப்பு பறிக்கப்படாமல், பொறுப்பை மட்டும் முதல்வர் மாற்றம் செய்யப்பட்டதற்கு காரணமே அவரது சமூகம் தானாம்.. ராஜகண்ணப்பனின் சமூகத்தை பொறுத்தவரை, மிகப்பெரிய ஆளுமையாக, முக்கிய தலைவராக கருதப்பட்டு வருகிறார்..

சமூக வாக்கு
அதனால்தான் ஜெயலலிதாவும் அன்றைய காலகட்டத்திலேயே முக்கியத்துவம் தந்திருந்தார். பெரும்பாலானோர் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பதாலும், இவர்களின் வாக்கு சதவீதம் குறிப்பிடத்தகுந்த அளவு உள்ளதாலும் அதை இழக்க திமுக விரும்பவில்லையாம்.. எனினும், சாதியை பயன்படுத்தி பேசியுள்ளதற்கு இந்நேரம் திமுக அரசு இவர்மீது கைது நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும் என்று நேற்றைய தினம் அதிமுகவின் கேபி முனுசாமி உட்பட பலரும் கோரி வருவதும் இங்கு கவனிக்கத்தக்கதாக உள்ளது..

பதவி
இவர் மீது ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 2005ல் போடப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் 2015ல் இவர் மீதான வழக்குகள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன.. இப்போதும் இவருக்கு காலம் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது.. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவியிலாவது ராஜகண்ணப்பன் தொடர்ந்து நீடிப்பாரா? என்று தெரியவில்லை. அதேசமயம், தன்மீதான சர்ச்சைகளும், விமர்சனங்களும் இனியும் எழாதவாறு பார்த்து கொள்ள வேண்டிய நெருக்கடிக்கும், கட்டாயத்தக்கும் ராஜகண்ணப்பன் ஆளாகி உள்ளார் என்பதையும் இங்கு அழுத்தமாக வலியுறுத்தப்பட வேண்டி உள்ளது.
-
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
Alangulam: ஆலங்குளத்தில் பூங்கோதைக்கு ஏமாற்றம்.. மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு! நேரடியாக மோதும் திமுக vs அதிமுக! -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்











Click it and Unblock the Notifications