Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேற லெவல் ஆட்சி.. ஒட்டுமொத்த இந்தியாவே முதல்வர் ஸ்டாலினை வியந்து பார்க்கிறது! சொல்வது தா.மோ.அன்பரசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் இன்னும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி காஞ்சிபுரத்தில் திமுக நிகழ்ச்சி நடைபெற்றது

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.

 தா.மோ.அன்பரசன்

தா.மோ.அன்பரசன்

இந்த சிறப்புக் கருத்தரங்கிற்கு திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இந்த கருத்தரங்கில் திண்டுக்கல் லியோனி, புலவர் மா.ராமலிங்கம், சுப.வீரபாண்டியன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். அதன் பின்னர் பேசிய தா.மோ.அன்பரசன் திமுக அரசு குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களையும் புகழ்ந்து பேசினார்.

 மத்திய அமைச்சர்கள்

மத்திய அமைச்சர்கள்

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "அடுத்து 2024ஆம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காகவே மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தல் இல்லையென்றால் இதெல்லாம் நடக்காது. இத்தனை காலம் இப்படி எதுவும் நடந்தது இல்லை. தேர்தல் காரணமாகவே இப்படிச் செய்கிறார்கள்.

 வியந்து பார்க்கிறார்கள்

வியந்து பார்க்கிறார்கள்

இதை எல்லாம் ஒழிக்கக் கடந்த தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் நாம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். திமுகவுக்கு ஸ்டாலின் தலைமையேற்ற பின்னர் வரிசையாக மூன்று தேர்தல்களில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்து உள்ளார். தமிழ்நாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதன் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவே திமுகவை வியந்து பார்க்கிறது.

 மிக பெரிய மரியாதை

மிக பெரிய மரியாதை

நமது முதல்வருக்கு நாட்டில் அனைத்து கட்சிகள் மத்தியிலும் மிகப் பெரிய அளவுக்கு மரியாதை உள்ளது. அந்த மரியாதை தொடர வேண்டும் என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மிகப் பெரிய அளவில் வெல்ல வேண்டும். இதற்கான வேலையை திமுகவினர் இப்போதே தொடங்க வேண்டும். ஆட்சியில் இருக்கிறோம் என்று சும்மா இருக்கக் கூடாது. இப்போதே களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

 திட்டங்கள்

திட்டங்கள்

ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்று 15 மாதங்கள் நிறைவடைந்து உள்ளன. கடந்த ஓராண்டில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. குறிப்பாக மகளிருக்கு இலவச பஸ் பயணம், ஆவின் விலை குறைப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உள்ளிட்ட திட்டங்களுக்கு மக்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து. பெரும்பாலான வாக்குறுதிகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதாகவே திமுகவினர் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+