சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஹீரோ".. திமுகவா இப்படி.. நம்பவே முடியலையே.. ஆனா "அந்த" ஒரு விஷயம்தான்.. வியந்து பார்க்கும் தமிழகம்

திமுகவின் தேர்தல் அறிக்கை வரவேற்பை பெற்று வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: "அடடே திமுகவா இப்படி? நம்பவே முடியலையே.. என்று பலரின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்துள்ளது திமுக தேர்தல் அறிக்கை. "மிகச் சிறப்பான தேர்தல் அறிக்கை" என்று திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்துக்கள் வலம் வருகின்றன.

இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் வர உள்ளது.. இப்போதே திமுக வேகம் எடுத்து வருகிறது.. நேற்று வேட்பாளர் லிஸ்ட் அறிவித்தது.. இன்று தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது..

வட்டியில்லா கடன், ஆட்டோ வாங்க 10 ஆயிரம்.. திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் வட்டியில்லா கடன், ஆட்டோ வாங்க 10 ஆயிரம்.. திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். உண்மையிலேயே பாராட்டத்தக்க பல விஷயங்கள் இதில் உள்ளன.. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்ற தேர்தல் அறிக்கை மேலும் பாராட்டை பெற்று வருகிறது.

 விவசாயம்

விவசாயம்

அதற்கு காரணம், முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்... நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.. அதிமுக அரசால் ஏற்பட்ட கடன்சுமையை சரிப்படுத்த பொருளாதார குழு அமைக்கப்படும்.. ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்படும்.. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்... மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கூட்டுறவு சங்க கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.. சிலிண்டருக்கு ரூ. 100 மானியம்.. கொரோனா நிவாரணம் ரூ.4000...பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும்" என்ற அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

 வாக்குகள்

வாக்குகள்

ஆனாலும், இலவசங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராத திமுக தேர்தல் அறிக்கையாக இது உள்ளது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையே திசை ஈர்த்து வருகிறது. ஏழை மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை பயன்படுத்தி கொண்டு வருகின்றன.. அதாவது பெருவாரியான ஓட்டுக்களை பெறுவதற்காக, ஒரு பக்கம் பணமும் மற்றொரு புறம் வாக்குறுதிகளையும் வாரி இறைக்க வேண்டி உள்ளது..

 மானியங்கள்

மானியங்கள்

நம்பவே முடியாத இலவச திட்டங்களும், மானியங்களும் உள்ளடக்கியதாகவே பெரும்பாலான தேர்தல் அறிக்கைகள் இருந்து வருகின்றன. இதில் திமுகதான் ஹைலைட்.. அதிலும் 2006 தேர்தலின்போது திமுக அறிவித்த இலவச திட்டங்களை இன்றளவும் மறக்க முடியாது.. "கதாநாயகனே தேர்தல் அறிக்கைதான்" என்று ஃபேமஸ் ஆகும் அளவுக்கு இலவச திட்டங்களை அறிவித்தது அப்போதைய திமுக.. குறிப்பாக இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், மாணவர்களுக்கு சைக்கிள், விவசாய கடன் ரத்து, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் இப்படி அறிவிப்புகள் தமிழக மக்களையே அன்று திணடிறத்துவிட்டன.

இலவசம்

இலவசம்

அப்படிப்பட்ட திமுக, இன்றைய தினம் பெரிதாக எந்த இலவசங்களையும் அறிவிக்காதது ஆச்சரியமாக உள்ளது.. ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது அதைவிட வியப்பை கூட்டி கொண்டிருக்கிறது.. இதில் ஒன்று மட்டும் இடிக்கிறது.. இலவச லேப்டாப்பை வழங்க போவதாக திமுக சொல்கிறது.. இது ஜெயலலிதா அன்றே வழங்கிவிட்டார்.. அதன் மூலம்தான் மாணவர்கள் மனசிலும் அம்மா இடம்பிடித்தார்..

 சபாஷ்

சபாஷ்

சமீப காலமாக அதிமுக, மநீம அறிவிப்புகளை திமுக காப்பி அடிப்பதாக சொல்லி வரும் நிலையில், இந்த ஒரு அறிவிப்பு மட்டும் ஏனோ நெருடலாக இருக்கிறது.. மற்றபடி, அயராத உழைப்புக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் முக்கியத்துவம் தந்து இலவசங்களை திணிக்காமல் முன்னெடுத்து வரும் திமுகவுக்கு ஒரு சபாஷ் என்று பலரும் கூறும் அளவுக்கு பல முக்கியமான, உண்மையிலேயே புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டதாக திமுக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

English summary
DMK MK Stalin has released 2021 Election Manifesto without Freebies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X