நீட் தேர்வில் 'ஜீரோ பெர்சன்டைல்'.. திமுக எம்எல்ஏ மருத்துவர் எழிலன் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி
சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண் 'ஜீரோ பெர்சென்டைலாக' குறைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து திமுக எம்எல்ஏ மருத்துவர் எழிலன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண் ஜீரோ பெர்சென்டைலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக பேசிய திமுக எம்எல்ஏ மருத்துவர் எழிலன், "இதே 'ஜீரோ' percentile சிஸ்டம் இருந்திருந்தால் அனிதா கூட டாக்டர் ஆகியிருப்பார்" என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, "அடிப்படையில் ஜீரோ சதவிகிதத்திற்கும் ஜீரோ பெர்சென்டைலுக்கும் இருக்கும் வித்தியாசத்தை விளக்க வேண்டும். மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு தொடர்பாகதான் மத்திய சுகாதாரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது எம்பிபிஎஸ் முடித்துவிட்டு எம்டி, ஜெனரல் மெடிசன் போன்ற படிப்புதான் ஒரு மருத்துவரை எந்தத் துறையில் சிறந்தவர் என்பதை தேர்ந்தெடுக்கிறது. முன்னர் இது அகில இந்திய தேர்வாக இருந்தது. நாங்கள் மாநிலத்தில் தேர்வு எழுதுவோம் அதன் பின்னர் தேசிய அளவில் தேர்வெழுதுவோம். இதனை அடுத்து இதை ஒரே தேர்வாக மத்திய அரசு கொண்டு வந்தது.
இளநிலை நீட் வருவதற்கு முன்னரே முதுநிலை நீட் வந்துவிட்டது. அகில இந்திய தேர்வுதான் முதுநிலை நீட் தேர்வாக உருவெடுத்தது. இந்த முதுநிலை நீட் தேர்வு வந்த போது மாணவர்கள் பல்வேறு தேர்வுகளை எழுதுகிறார்கள் எனவே ஒரே தேர்வு மூலம் அவர்களை முதுநிலை மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கிறோம் என்று மத்திய அரசு சொன்னது. இப்படியாக முதுநிலை நீட் தேர்வு வந்த போது மொத்தமாக 200 கேள்விகள் அதற்கு 800 மதிப்பெண்கள் என்று இருந்தது.
அதாவது ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் என்கிற விதம் இருந்தது. தவறாக பதிலளித்தால் மைனஸ் 1 மதிப்பெண் வழங்கப்படும். முதலாம் ஆண்டு முதுகலை நீட் தேர்வு நடந்த போது மொத்தம் உள்ள 800 மதிப்பெண்களுக்கு 400 மதிப்பெண்கள் பெற்றால்தான் மருத்துவத்தில் முதுகலை பயில முடியும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் தனியார் நிகர் நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் காலி இடங்கள் இருந்ததால் இந்த 'பர்சன்டைல்' சிஸ்டம் உருவாக்கப்பட்டது.
மொத்த தேர்வர்களில் குறைவான மதிப்பெண் முதல் அதிகமான மதிப்பெண் வரிசைப்படுத்தி குறைவான மதிப்பெண்ணிலிருந்து இருந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் எவ்வளவு அதிகமாக பெற்று இருக்கிறார் என்பதை கூறுவதே பர்சன்டைல் சிஸ்டம் ஆகும். தற்போது 'ஜீரோ பர்சன்டேயில்' இருந்தாலே முதுகலை மருத்துவ படிப்புக்கு தகுதியானவர் என்று மத்திய அரசின் சுகாதாரத் துறை கூறியுள்ளது. ஜீரோ பெர்சென்டைல் என்பது 'ஜீரோ மதிப்பெண்ணை' விட குறைவானது என்று சில அறிவு ஜீவிகளுக்கும் முன்னாள் மருத்துவ மாணவர்களுக்கும் சொல்ல வேண்டியுள்ளது.
அதாவது நீட் முதுகலை தேர்வில் மொத்தம் உள்ள 800 மதிப்பெண்களுக்கான 200 கேள்விகளுக்கு முழுவதுமாக தவறான பதில் அளித்து மைனஸ் 200 மதிப்பெண்கள் பெறுவதுதான் ஜீரோ பர்சன்டையில் ஆகும். இந்த ஆண்டு நீட் முதுகலை தேர்வில் மைனஸ் 40 மார்க் வாங்கியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் முதுகலை மருத்துவம் பயில தகுதியானவர்கள் என்று மத்திய அரசு இந்த ஜீரோ பெர்சென்டைல் அறிவிப்பு மூலம் கூறியுள்ளது. தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக இப்படியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு மருத்துவ கட்டமைப்புக்கும் தரமான மருத்துவர்கள் உருவாக்குவதற்கும் எதிரானது.
முன்னர் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் 190க்கு மேலே 196 மதிப்பெண் 197 மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற சூழ்நிலை இருந்தது. அதேபோல மொத்த மதிப்பெண்களின் 50% கடந்தால்தான் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று இருந்தது. இப்படி இருக்கையில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் கொல்லப்படாது மாறாக தேசிய அளவில் நாங்கள் நடத்தும் நீட் தேர்வு மதிப்பெண்கள் தான் கணக்கில் கொள்ளப்படும் என்று மத்திய அரசு சொல்லி, அந்த நீட் தேர்விலும் பூஜ்ஜியத்துக்கும் கீழே மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட முதுகலை மருத்துவராக பயில்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறுவது தவறானது.
இது மருத்துவ தரத்தை உயர்த்துமா என்று கேள்வி எழுப்பி தமிழ்நாட்டு முதல்வர் விரிவாக அறிக்கையை விட்டிருக்கிறார். இந்த ஜீரோ பெர்சென்டைல் சிஸ்டம் அனிதாவுக்கு இருந்திருந்தால் அனிதா டாக்டராக வந்திருப்பார் இல்லையா?" என்று மருத்துவர் எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications