யாராவது உதவுங்க.. கருப்பன் குசும்பன் புகழ் நடிகரின் உருக்கமான கோரிக்கை.. திமுக எம்எல்ஏ இலவச சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகர் தவசிக்கு இலவசமாக புற்றுநோய் சிகிச்சை அளித்து வருவதாக திமுக எம்எல்ஏ டாக்டர்.சரவணன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சிவகார்த்திகேயன் பட நடிகர் Thavasiக்கு புற்றுநோய் பாதிப்பு

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடுவர் தவசி. சூரியின் அப்பாவாக வரும் தவசி.. இந்த படத்தில் சொன்ன கருப்பன் குசும்புகாரன் என்ற வசனம் இணையம் முழுக்க பிரபலம்.

    இதை வைத்து ஆயிரக்கணக்கான மீம்கள் வந்துள்ளது. கிழக்குச் சீமையிலே படத்தில் அறிமுகம் ஆன இவர்.. பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

    கதாபாத்திரம்

    கதாபாத்திரம்

    நடிகர் ரஜினியின் அண்ணாத்தே படத்திலும் இவர் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கார் விபத்தில் சிக்கிய இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வரும் இவர்.. உடல் மெலிந்து கஷ்டப்பட்டு வருகிறார்.

    சிகிச்சை

    சிகிச்சை

    சிகிச்சை பெற்று வரும் இவர் குடும்பத்தை கவனிக்க போதிய பணம் இன்றி இவர் சிரமப்பட்டு வருகிறார். இந்த நிலையில், எனக்கு யாரவது பொருளாதார ரீதியாக உதவுங்கள் என்றும் இவர் கோரிக்கை வைத்துள்ளார். இவர் முடியின்றி.. உடல் மெலிந்து கஷ்டப்படும் புகைப்படும் இணையத்தில் வெளியாகி பலரின் இதயத்தை உடைத்துள்ளது.

    உதவி

    உதவி

    இந்த நிலையில் நடிகர் தவசிக்கு இலவசமாக புற்றுநோய் சிகிச்சை அளித்து வருவதாக திமுக எம்எல்ஏ டாக்டர்.சரவணன் தெரிவித்துள்ளார். இது குறித்து சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நகைச்சுவை நடிகர் தவசி உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

    உதவி

    உதவி

    இதனால் எனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறேன். தவசி 11.11.2020 அன்று உணவுக்குழாய் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் எங்களது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

    உதயநிதி

    உதயநிதி

    140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் எங்களது கழக இளைஞரணி செயலாளர் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் "கண்ணே கலைமானே" திரைப்படத்திலும் நடித்துள்ளார். அந்த படப்பிடிப்பு தளத்தில் தான் எனக்கு இவர் அறிமுகமானார்.

     உதவி செய்ய நினைத்தால்

    உதவி செய்ய நினைத்தால்

    இவருக்கு யாரேனும் உதவ நினைத்தால் அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினால் வறுமையில் இருக்கும் அவரின் குடும்பத்தார்க்கு பேருதவியாக இருக்கும். இவ்வாறு டாக்டர்.சரவணன் எம்எல்ஏ கூறி உள்ளார். தவசியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில்.. அவருக்கு இலவச சிகிச்சை அளித்து வருவதாக எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+