கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு மட்டும் டீச்சர்களே இல்லை! இதான் மும்மொழி கல்வி சதி- எழிலன்
சென்னை: ஆர்டிஐ மூலமாக தகவல் எடுக்கப்பட்டதில் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே கிடையாது. மும்மொழிக் கொள்கை என்பது மறைமுகமாக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியாகும். ஒன்றிய அரசு நடத்துகிற பள்ளிகளே அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று திமுக எம்எல்ஏ எழிலன் கூறியுள்ளார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மும்மொழிக் கல்வி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், ஆர்டிஐ மூலமாக தகவல் எடுக்கப்பட்டதில் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே கிடையாது. ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சைனிக், கேவி பள்ளிகளில் 53 ஆசிரியர்கள், 100 இந்தி ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், தமிழ் பேசும் ஆசிரியர்கள் பூஜ்ஜியம்.

மும்மொழிக் கொள்கை என்பது மறைமுகமாக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியாகும். ஒன்றிய அரசு நடத்துகிற பள்ளிகளே அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மும்மொழிக் கொள்கை என்றாலே இந்தி திணிக்கப்படாது என்பது அல்லது. மும்மொழி என்றாலே தமிழ், ஆங்கிலம், இந்தி தான். எந்த நிலையில் இது கட்டாயம் ஆக்கப்படும் என்றால், சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தை தனது பாடத்திட்டங்கள் மூலமாக இந்தியை படிக்கும் போது அதனை திணிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
குழந்தைகள் மூன்றாம் வகுப்பிலேயே மொழிப் பாடங்களுக்கான திணிப்பு நடக்கக் கூடாது. ஆக்கப்பூர்வமான சூழலியல் இருந்த படிப்புகளைத் தான் குழந்தைகள் படிக்க வேண்டும். பாட நூல்களிலேயே அவர்களுடைய மொழியை திணித்து விடுவார்கள். அரசுப் பள்ளிகளில் முதல் தலைமுறையாக இருப்பார்கள். பட்டியலின மக்கள், பழக்குடி மக்கள், மலைவாழ் மக்கள் அரசுப் பள்ளிகளில் படிப்பார்கள். தாய்மொழிக் கல்வி, ஆங்கில மொழியும் கற்றதினால்தான் தற்போது சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.
இருமொழிக் கொள்கை மூலமாகத்தான் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்து மருத்துவர், வழக்கறிஞர், இன்ஜினியர் என மக்கள் நல்ல நிலைக்கு வந்துள்ளனர். மும்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கும் மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசம் சமூக பொருளாதார தளத்தில் உயர்ந்திருக்கிறார்களா. 2019 இல் தமிழகத்தில் 6 ஆம் வகுப்பில் 89 சதவீதமாக இருந்த எண்ணிக்கை 97 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதே இந்தி பேசும் மாநிலங்களில் 59 சதவீதத்தை தாண்டுவதில்லை. பள்ளிக்கு வரவைப்பதில் இருந்து ஒரு நல்ல சூழலை திராவிட மாடல் ஏற்படுத்தியுள்ளது.
காமராஜர் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். அதனை மத்திய அரசு கொண்டு வர 50 ஆண்டுகள் ஆனது. எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்கள், கலைஞர் முட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இப்போது பல பள்ளிகளில் நமது முதல்வர் 20 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். கற்றல் திறன், கணக்குத் திறன், ஊட்டச்சத்து போன்றவை குழந்தைகளுக்கு கிடைக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் இல்லத்தரசிகள் மாதம் 900 ரூபாய் அளவுக்கு சேமிக்கின்றனர். 22 ஆயிரம் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. அரசாங்கப் பள்ளி மாணவர்கள் கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு பேர் சென்டிரல் ஆஃப் எக்சலன்ஸில் சேர்ந்துள்ளனர். பல்வேறு ஒருங்கிணைந்த திட்டங்களை செயல்படுத்தி எந்த மாடல் வெற்றியடைந்த மாடலாக இருக்கிறது என்பதைப் பின்பற்றி அதனை மத்திய அரசு பின்பற்றாமல் மொழியை திணிப்பதுதான் அவர்களுடைய சித்தாந்தமாக உள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications