கீழடி விவகாரம்.. அதிமுகவின் அப்பட்டமான பொய்.. ரூ.105 கோடி செலவிடப்பட்டதா? கொந்தளித்த எழிலன்!
சென்னை: கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அதிமுக ஆட்சியில் ரூ.105 கோடி செலவிடப்பட்டதாக கூறியது அப்பட்டமான பொய் என்று திமுக எம்எல்ஏ எழிலன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் ரூ.1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ள எழிலன், திமுக ஆட்சியில் ரூ.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கீழடி விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக இடையில் கடுமையான விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் திமுக எம்எல்ஏ எழிலன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கீழடி ஆய்வு 2016ஆம் ஆண்டு முடிவடையும் போது மத்திய அரசு நிறுத்த வேண்டும், மூட வேண்டும் என்று கூறியது. இதனை நிறுத்திய போதே, அமர்நாத் ராமகிருஷ்ணா உடனடியாக அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.

பின்னர் கீழடி ஆய்வு நடந்த போது, கனிமொழி உள்ளிட்டோர் கீழடி ஆய்வு தளத்திற்கே சென்றனர். இதனிடையே திமுக தரப்பில் வழக்கறிஞர் கனிமொழி ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் நீதிமன்றம், எதற்காக இத்தனை நாட்களாக கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பியது. அப்போது அதிமுக அரசு தரப்பில், மத்திய அரசு தரப்பிலேயே அகழ்வாராய்ச்சி நடத்தப்படுவதாக பதில் அளிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே அதிமுக அரசு நிலைப்பாட்டை எடுத்தது. திமுக ஆட்சி அமைக்கப்பட்ட பின் கீழடியில் கிடைத்த பொருட்களை பல்வேறு ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டன. அதேபோல் கீழடி ஆய்வுக்கு அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியில் பொய் சொல்கிறார்கள். 2016 முதல் 2021 வரை 2 தொல்லியல் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது திருவள்ளூர் பட்டறை பரமத்தூர் ஆராய்சிக்கும், கீழடிக்கும் தலா ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.1 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக தரப்பில் ரூ.105 கோடி செலவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். திமுக ஆட்சி அமைந்த பின் ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி நடந்த போது, ஒருமுறை கூட மாஃபா பாண்டியராஜன் நேரில் சென்றதே கிடையாது.
அமர்நாத் ராமகிருஷ்ணா உடன் ஒருமுறை கூட ஆலோசனை நடத்தியதே கிடையாது. மூடப்பட்ட அகழ்வாராய்ச்சிகளை பார்த்துவிட்டு, கீழடி நாகரீகத்தை பாரத நாகரீகம் என்று தான் சொல்லிவிட்டு வந்தார். அதிமுக, பாஜக இணைந்து தமிழர்களின் நாகாரிகத்தை மறைக்க பார்க்கிறார்கள். கீழடிக்காக ஒரு போராட்டமோ, ஒரு அறிக்கையோ கூட அதிமுக வெளியிடவில்லை. கீழடி ஆய்வு நிறுத்தப்பட்ட போது, ஒருமுறை கூட எதிர்த்து கேட்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications