அமித்ஷாவை நம்பி ஏமாந்த அதிமுக நிர்வாகிகள்! அண்ணாமலையின் ஆட்டம் மேலிட கட்டளைப்படியே! -இனிகோ இருதயராஜ்
சென்னை: அண்ணாமலை ஆட்டம் இத்தோடு முடிந்தது என்ற கற்பனையில் அமித்ஷாவை பார்க்க போய் அதிமுக நிர்வாகிகள் ஏமாந்து நிற்கிறார்கள் என, திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கிண்டல் அடித்துள்ளார்.
பாஜகவும் அதிமுகவும் ஒரே கூட்டணியில் இருந்தும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்து புதுவித அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக இனிகோ இருதயராஜ் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆட்டம் தாங்க முடியாமல் பஞ்சாயத்துக்காக டெல்லிக்கு காவடி எடுத்த எடப்பாடி வகையறாக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிமுகவின் பொது செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அந்த கட்சியை பாஜக ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இரட்டை இலை சின்னத்திற்காகவம், எம்ஜிஆர், ஜெயலலிதா சென்டிமென்ட்டிற்காகவும் அக்ககட்சிக்கு இருக்கும் ஓட்டுகளை குறிவைத்தே பாஜக, அதிமுகவை தன்னுடன் வைத்திருக்கிறது.''
''கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகும் அதிமுகவும், பாஜகவும் தொடர்ந்து கூட்டணியில் இருந்து வருகின்றன. ஆனாலும் இவ்விரு கட்சிகளுக்கிடையே அவ்வப்போது நிகழும் மோதல்களும், சண்டை சச்சரவுகளும் இது பொருந்தா கூட்டணி என்பதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே இவ்விரு கட்சிகளுக்கிடையேயான உறவு தாமரை இலை மேல் தண்ணீர் என்பது போல் தான் உள்ளது.''
''பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை தாங்களே கூட்டணியின் தலைவர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தொடர்ந்து சொல்லி வந்தாலும் பாஜக காதில் அது விழவே இல்லை. அப்படித்தான் இவ்விரு கட்சிகளுக்கு இடையிலான உறவு, ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து கொண்டிருக்கிறது.''
''அண்மையில் டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதன் பிறகு யாரையும் நம்பாமல் தான் மட்டுமே டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி சந்தித்து பேசியது அனைவரும் அறிந்ததே. இது போன்ற கூட்டணி சடங்கு சம்பிரதாயங்கள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில் மறுபுறம் அண்ணாமலை தனது வழக்கமான பாணியில் எதை எதையோ பேசி எடப்பாடியையும், அவரது வகையறாக்களையும் சூடேற்றிக் கொண்டே இருக்கிறார். ''
''அண்ணா குறித்து அவர் பேசிய ஒரு சர்ச்சை கருத்தால் கொதித்து எழுந்த அதிமுகவினர், பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என அபாயச்சங்கு ஊதினர். தனது பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நிபந்தனை வைத்தனர். அதற்குள் அமலாக்கத்துறை, சிபிஐ சோதனை போன்றவை எல்லாம் கண் முன் தோன்றியதும் தங்களுக்கு அண்ணாமலையுடன்தான் பிரச்சனையே தவிர பாஜகவுடன் அல்ல எனக்கூறி அரசியல் அரங்கை அதிர வைத்தனர்.''
''தாங்கள் சொன்னதைச் செய்யும் இடத்தில் இருக்கும் அதிமுக தமக்கு கட்டளையிடுவதா? என்பதை நன்கு உணர்ந்திருக்கும் அண்ணாமலை, தனது பாணியில் எப்போதும் போல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.''
''இந்த பிரச்சினையை எப்படி கையாள்வது? அண்ணாமலையை எப்படி சமாளிப்பது? தனக்கான அரசியல் மரியாதையை காப்பாற்றுவது எப்படி? என்ற குழப்பத்தில் இருக்கும் எடப்பாடி திட்டப்படியே தங்கமணி, வேலுமணி, சி.வி சண்முகம் போன்ற அவரது வகையறாக்கள் திடீர் பயணமாக டெல்லி சென்றார்கள். அண்ணாமலை ஆட்டம் இத்தோடு முடிந்தது என அவர்களாகவே மனதில் நினைத்துக் கொண்டு அமித்ஷாவை பார்க்க போய் ஏமாந்து போனார்கள். ''
''அண்ணாமலை ஆட்டம் எல்லாம் அமித் ஷாவின் கட்டளைப்படிதான் என்பதைக்கூட புரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி? சரி வெறும் கையோடு எப்படி தமிழகம் திரும்புவது? பத்திரிகையாளர்களுக்கு என்ன சொல்வது? என்ற அச்சத்தாலும், டெல்லியை சுற்றி பார்க்க போனது போல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் பாஜகவின் ஜே.பி நட்டா, பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து டீயும் சமோசாவும் சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறார்கள் எடப்பாடி வகையறாக்கள்.''
-
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்!












Click it and Unblock the Notifications