கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் கறுப்பர் கூட்டம்: பழனி திமுக எம்.எல்.ஏ. ஐபி செந்தில்குமார் கண்டனம்
சென்னை: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் பதிவிட்டதற்கு பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.பி. செந்தில்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை:
ஒன்றேகுலம்_ஒருவனேதேவன் என்ற கொள்கையை தன் உயிர்மூச்சாக கொண்ட அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் மக்கள் பணியானது நாடறிந்ததே. பண்பாடு, கலாச்சாரம் என்பது வேறு, மூடநம்பிக்கையை எதிர்ப்பது வேறு,..

வரலாற்றுச்சிறப்புமிக்க திருவாரூர் தேரை ஓட வைத்த தலைவர் எங்கள் தலைவர் கருணாநிதி என்பது உலகமே அறிந்த விடயம்.. சில தினங்களுக்கு முன்பு திருமுருக நம்பிக்கையுடையோரை புண்படுத்தும் படியும், தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தியும் கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பில் அங்கம் பெற்ற ஒருவர் தமிழ்க்கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இத்தனை நாட்களாக இல்லாமல் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த இழிச்செயல் யாரால் தூண்டி விடப்பட்டிருக்கும் என்பது விரைவில் மக்களுக்கு தெரிய வரும்.. திமுக என்றுமே எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல..
பழனி சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பணர்வோடு இச்செயலை வண்மையாக கண்டிக்கிறேன்.. இவ்வாறு ஐ.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications