மகிழினி பாப்பாவுக்கு ஆறு வயசு.. வாழ்த்து சொன்ன தாத்தா மா.சு!
பேத்திக்கு மா சுப்பிரமணியன் ட்வீட்டில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி உள்ளார்.
Recommended Video
சென்னை: ஆறாவது வயதில் அடியெடுத்து வைக்கும் தனது பேத்திக்கு மா.சுப்பிரமணியன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர். திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர்.

சென்னை ஐகோர்ட் வக்கீல்! எப்போதும் படுசுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டே இருப்பவர் மா.சு.தான் என்ற பெயர் பெற்றவர். இவர் மேயராக இருந்தபோது பல செயல்பாடுகள் சென்னையின் கவனத்தை ஈர்த்தது.
இவருக்கு 20 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. ஆனால் மாரத்தான் போட்டிகளில் வருடந்தோறும் தவறாமல் கலந்துகொள்வதுடன், பல கிலோ மீட்டர்கள் ஓடி உலகளவு சாதனை பெற்றவர்களில் சுப்பிரமணியனும் ஒருவர்!
அகவை ஆறில்
— Subramanian.Ma (@Subramanian_ma) May 8, 2019
அடியெடுத்து வைக்கும்
அன்பு பேத்தி மகிழினிக்கு
மகிழ்ச்சி நிறைந்த பிறந்தநாள்
வாழ்த்துக்கள்...... pic.twitter.com/GP4yBiHUJd
இப்போது விஷயம் என்னவென்றால், இன்று மா.சு.வின் பேத்திக்கு பிறந்தநாள். அதனால் பேத்தி போட்டோவை ட்விட்டரில் போட்டு தன் வாழ்த்தையும் சொல்லி இருக்கிறார்.
அதில், "அகவை ஆறில் அடியெடுத்து வைக்கும் அன்பு பேத்தி மகிழினிக்கு மகிழ்ச்சி நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்......" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டுக்கு கீழே மகிழினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை நெட்டிசன்கள் சொல்லி வருகிறார்கள். குறிப்பாக மகிழினி பெயர் நல்லா இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications