சாட்டை துரைமுருகன், இது தஞ்சாவூர் அல்ல எழும்பூர் தான்!.. திமுக எம்எல்ஏ பரந்தாமன் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர் டிமலஸ் சாலையின் தற்போதைய நிலை! இதில் மட்டும் நாற்று நட்டு விவசாயம் செய்தால் ஒரு போகம் விளையும்.. ஐடியா இல்லாத பசங்க! என்று நாம் தமிழர்கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் கிண்டல் செய்திருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த பதிவில் எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமனை டேக் செய்திருந்தார் சாட்டை துரைமுருகன். இதையடுத்து பரந்தாமன் எம்எல்ஏ கொடுத்துள்ள பதிலடியில், பொதுநோக்கு போர்வையில் அழுக்கு அரசியல் செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார்.

அண்மை காலமாக சென்னையில் உள்ள சாலைகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பள்ளிக்கரணையில் ஆரம்பித்த பிரச்சனை, சென்னை முழுக்க பரவி வருகிறது. சென்னை முழுக்க மழையால் சாலைகள் பழுதடைந்துள்ள குறிப்பிட்டு டேக் செய்து விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர்கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் சென்னை எழும்பூர் டிமலஸ் சாலையின் தற்போதைய நிலை! இதில் மட்டும் நாற்று நட்டு விவசாயம் செய்தால் ஒரு போகம் விளையும்.. ஐடியா இல்லாத பசங்க! என்று கிண்டல் செய்திருந்தார்.

DMK MLA responds to sattai Duraimurugan who criticized the current condition of Chennai Egmore Road

இதற்கு பதிலடி கொடுத்து எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "பல ஆண்டுகளாக இந்த பகுதியில் சிறு மழை வந்தாலும் நீர்தேங்கிவந்த நிலை தான் இருந்தது. கடந்த 2022 மழையில் பெருங்குளம் போல் காட்சியளித்தது. ஏன் படகில் செல்லும் நிலையிருந்தது.

திராவிட மாடல் ஆட்சி நாயகர் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எனது முயற்சியில் பல கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டும்பணியும், 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களை அகற்றி புதியதாக அதிகம் விட்டம்கொண்ட குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

இந்த டிமலஸ் சாலை சந்திப்பு ஹஜ்கமிட்டி கட்டிடம் அருகில் மிகச்சொற்ப பணியான கால்வாய் இணைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி 3% பணியே இதுவும் முடியும் தருவாயில் இருந்தது. அதற்குள் வேறு ஒரு இடத்தில் உள்ள கழிவுநீர் நிலையத்தில் அதிகதிறன் கொண்ட குழாய் இணைப்பு பணி நடைபெற்று அதுவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவுற்றது. டிமலஸ் சாலை இணைப்பு முடிந்தால் தான் சாலை போடமுடியும்.

இதனை நான் கடந்த வாரம் அந்த பகுதிக்கே சென்று அப்பகுதி வாழ் மக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தேன். அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சமூகப்பொறுப்புடன் இ‌‌ந்த பணி தொய்வின்றி நடக்க கடந்த சில மாதங்களாக கொடுத்த நல் ஒத்துழைப்பால் மிகச்சீக்கிரமாக பணிகளை எங்களால் முடிக்க முடிந்தது. எனவே அப்பகுதி மக்கள் அரசு தங்களுக்காக எடுத்துள்ள நடவடிக்கையை கருத்தில்கொண்டு சில சிரமத்தை சில நாட்களுக்கு பொறுத்துக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

இந்த மழைக்கு முன்னே சாலை அமைக்க முயற்சிக்கிறேன் அப்படி முடியவில்லை என்றால் மழை முடிந்ததும் இச்சாலை புதியதாக போடப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு நானே நேரில் சென்று சொல்லியிருக்கிறேன். எனவே அந்த பகுதியில் வசிக்காதவர்கள் அவர்களின் வலியை வெளிப்படுத்துவதாக பொதுநோக்கு போர்வையில் அழுக்கு அரசியல் செய்யவேண்டாம்" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+