திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலை 6.20 மணிக்கு ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது- மேலும் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு
கு.க.செல்வத்துக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆச்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே திமுக தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!